இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா இரண்டாவது நாள் ஆட்டத்தின் பாதியில் வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா இன்னும் நான்கு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் 53 வருடத்திற்கு பிறகு ஒரு இந்திய வீரரின் சாதனையை முறியடிப்பார்.
காயத்தால் வெளியேறிய பும்ரா
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் தொடரில் பொறுப்பேற்ற வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது நாள் போட்டியின் போது காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இன்னும் அவரது காயம் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் நாளைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் பங்கு பெறுவாரா? இல்லையா? என்ற முழுமையான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இந்த சூழ்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 13.06 சராசரியில் 32 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இவர் ஏற்கனவே 2020-21 ஆம் ஆண்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் நிலையில் அந்த சாதனையை தற்போது சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய லெக் ஸ்பின்னர் ஆக விளங்கிய பகவத் சந்திரசேகரின் சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது.
இன்னும் 4 விக்கெட் தேவை
பகவத் சந்திரசேகர் 1972/73ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 18.91 சராசரியில் 35 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். அதாவது ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக பகவத் சந்திரசேகர் முதலிடத்தில் இருக்கும் நிலையில் பும்ரா இவரது சாதனையை முறியடிக்க இன்னும் நான்கு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.
இதையும் படிங்க:சிராஜ் பிரசித் கிருஷ்ணா 6 விக்கெட் எடுக்கலாம்.. ஆனா பும்ரா இல்லனா இதை செய்யவே முடியாது – கவாஸ்கர் பேட்டி
தற்போது வரை 32 விக்கெட் கைப்பற்றி இருக்கும் நிலையில் இன்னும் நான்கு விக்கெட் கைப்பற்றினால் 36 விக்கெட்களோடு ஒரு இந்திய வீரராக முதல் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளைய ஆட்டத்தில் பும்ரா களம் இறங்கினால் இந்த சாதனையை முறியடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.எனவே நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






