கான்ஸ்டாஸ் செஞ்சது எனக்கு இளம் கோலியை ஞாபகப்படுத்துச்சு.. பும்ரா சரியா இத செஞ்சாரு – கவாஸ்கர் பேட்டி

0
220

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் பும்ரா கவஜாவின் விக்கெட் வீழ்த்தியது தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பும்ராவின் செயல்பாடு குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா ஐந்தாவது டெஸ்ட்

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வரும் பும்ரா இறுதியாக பேட்டிங்கிலும் தனது பங்குக்கு 22 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு முதல் நாளே ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கியது.

ஆஸ்திரேலியா வீரர்கள் வேண்டுமென்றே நேரத்தை கடத்த கேப்டன் பும்ரா பந்து வீசும் போது அது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது இடையே குறிப்பிட்ட சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட அந்த நிகழ்வு பெரிய வைரலானது. ஆனால் அதற்குப் பிறகு அடுத்த பந்து பும்ரா கவாஜாவின் விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சரியான பதிலடி கொடுத்ததை தொடர்ந்து கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தக்க பதிலடி கொடுத்த பும்ரா

இது குறித்து கவாஸ்கர் விரிவாக கூறும்போது “தற்போது நடைபெற்ற நிகழ்வு பேட்டிங் பற்றியது அல்ல. ஒருவரின் நடத்தை விஷயங்களை கிளறும்போது ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றியது. எதிரணியில் இருந்து எதிர் விளைவுகளை ஈர்க்கும் இளம் கோலியை எனக்கு இங்கு நினைவூட்டுகிறது. அதைத்தான் நாம் இங்கு பார்த்தோம். கவாஜா ஆட்டம் இழந்த பந்துக்கு முன்பாக சாம் கான்ஸ்டாஸ் பும்ராவிடம் ஏதோ கூறினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் அப்படி கூற வேண்டிய அவசியமே கிடையாது.

இதையும் படிங்க:50 விமர்சனங்கள் என் மீது வரும்.. ஆனா அணிக்கு இதுதான் தேவை.. முடிவு செஞ்சு விலகினேன் – ரோஹித் சர்மா பேட்டி

இதற்கு இயற்கையாகவே பும்ரா மற்றும் அணி வீரர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். இதனால்தான் அங்கிருந்து சில விஷயங்கள் அதிகரித்தன. கான்ஸ்டாஸ் திடீரென்று எதிரணியின் செயல்பாடுகளுக்கு கீழ்வரும் நபராக மாறிவிட்டார். முதல் இன்னிங்ஸில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இதை செய்த நிலையில் பும்ரா அதற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார்” என்று கூறியிருக்கிறார். தற்போது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாளில் 181 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -