இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் குவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் ரோகித் சர்மா தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேற பும்ரா ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பதவி வகித்தார். இந்த நிலையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் குவித்தது. இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச வரும்போது தொடக்க வீரர் கவாஜா வேண்டுமென்றே தாமதப்படுத்தினார்.
இந்த நிலையில் பும்ரா ஓடி வந்த நிலையில் அவரை கவனித்து அங்கேயே நின்று அம்பையரிடம் அப்பீல் செய்ய, இதனை கவனித்த மறுமுனையில் இருந்த கான்ஸ்டாஸ் பும்ராவிடம் சிறிது நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தொகுப்பு வைரலாகி வரும் நிலையில் அது குறித்து ரிஷப் பண்ட் அதற்கான காரணம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
வேண்டுமென்றே ஆஸ்திரேலியா வீரர்கள் செய்தனர்
இது குறித்து ரிஷப் பண்ட் கூறும் பொழுது “நாங்கள் ஆடுகளத்தில் நின்று கொண்டிருந்தபோது பும்ரா மற்றும் கான்ஸ்டாஸ் இடையே சிறிய உரையாடல் நிகழ்ந்தது. அவர்கள் வேண்டுமென்றே சிறிது நேரத்தை வீணடிக்க விரும்பினார்கள். அதனால்தான் கான்ஸ்டாஸ் பும்ரா உடன் வேண்டும் என்று சிறிது நேரம் உரையாடினார். அப்படித்தான் நான் உணர்கிறேன். அவர் ஏது சொன்னார் நான் அதை சரியாக கவனிக்கவில்லை. ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் அவர்களால் ஓவர்கள் வீச முடியாது இன்னும் சிறிது நேரத்தை வீணடிக்கலாம். எனவே இதுவே ஆஸ்திரேலியா வீரர்களின் திட்டமாக இருந்தது” என்று ரிஷப் பண்ட் கூறுகிறார்.
இதையும் படிங்க:எனக்கு முன்பே தெரியும்.. அவர் இத செஞ்சிருந்தா.. கண்டிப்பா அவுட் ஆயிருக்க மாட்டார் – கவாஸ்கர் பேட்டி
இருப்பினும் பும்ராவின் அடுத்த பந்திலேயே கவாஜா ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகி வெளியேற முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் முடிவுக்கு வந்தது. எனவே நாளை இந்திய அணி விரைவாக ஆஸ்திரேலியா அணியை ரன்கள் குவிக்க விடாமல் ஆட்டம் இழக்கச் செய்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






