இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஐந்தாவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் போட்டி நடைபெறும் மெல்போன் ஆடுகளம் போட்டியை காண வந்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிறந்த மைதானங்களில் ஒன்றான மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் இந்திய அணி 369 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் குவித்தது.
தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சற்று முன்பு வரை மூன்று விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியை காண மொத்தமாக ஐந்து நாட்களில் இந்த மைதானத்திற்கு வருகை தந்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கை 3,50,700ஐக் கடந்துள்ளது. இது 1937 ஆம் ஆண்டு சர் டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 6 நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய போது 3,50,534 எண்ணிக்கையிலான பார்வையாளர்களை தற்போது இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக அதனை முறியடித்து இருக்கிறது.
வரலாறு காணாத கூட்டம்
1937 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் கூடுவது இதுவே முதல் முறையாகும். இதனை ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் இந்த வருகை பதிவேட்டினை பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் குழுவில் பேசும் போது உறுதிப்படுத்தி இருக்கிறார். நான்காவது நாள் ஆட்டத்தின் போது 43,867 ரசிகர்கள் போட்டியை காண வந்திருக்கிறார்கள். நான்காம் நாளோடு சேர்த்து மொத்தமாக 2,99,329 ரசிகர்கள் சேர்ந்து போட்டியை கண்டுகளித்திருக்கிறார்கள். இது இதுநாள் வரையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பதிவு செய்யப்படாத கூட்டமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க:பும்ரா அலெக்ஸ் கேரிக்கு செஞ்சது நம்பவே முடியல.. இதனால தான் அவர் ஒரு ஜீனியஸ் – சஞ்சய் மஞ்சுரேக்கர் புகழ்ச்சி
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் என்று மூன்று முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 58 ரன்களோடு களத்தில் இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






