2008ல் சேவாக் செஞ்சது ஞாபகம் இருக்கா ரோஹித்.. இந்திய அணி ஜெயிக்க இந்த பிளான் பண்ணுங்க – கவாஸ்கர் பேட்டி

0
250

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தற்போது 333 ரன்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு விக்கெட் மீதமுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்ததன் மூலமாக 333 ரன்கள் அதிகமாக உள்ளது. நாளை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஷிப் உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

எனவே இந்திய அணி அதிரடியாக விளையாடி இந்த போட்டியில் வெற்றி பெறுமா? அல்லது தோல்வி அடையாமல் இருப்பதே பெரிய விஷயம் என்று பொறுமையாக விளையாடி டிரா செய்யுமா? என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நமது அணி வெற்றி பெற செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி செய்ய வேண்டியது

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆம், இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஒரே நாளில் 387 ரன்கள் இலக்கை துரத்தியபோது வீரேந்திர சேவாக் செய்ததைப் போல இதுவும் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மிகத் தெளிவாக எனக்கு தோன்றுகிறது. முந்தைய நாள் ஆட்டத்தின் இறுதியில் அல்ல ஐந்தாவது நாளின் தொடக்கத்தில் சேவாக் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக்கினார்.

இதையும் படிங்க:நான் பாத்ரூம்ல ஒளிஞ்சுகிட்டேன்.. பாக்க முடியல.. 15 ரன்லதான் வெளிய வந்தேன்.. பாக் முதல் டெஸ்ட் – கேப்டன் பவுமா பேட்டி

அந்தப் போட்டியில் ஒரு நல்ல தொடக்கம் அமைந்தது கடவுள் ஏற்படுத்திக் கொடுத்தது போல நினைக்கிறேன். சரி இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்தியா 330 ரன்கள் இலக்கை பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். இதை முதலில் அமர்வுகளாக பிரிக்க வேண்டும். ஆனால் டீ பிரேக், உணவு இடைவெளி என்று அதிக நேரம் எடுக்கக் கூடிய வகையில் இருக்கும். அதனால் இதனை மணி நேரங்களாக கணக்கில் கொண்டு எந்த நிலையில் இந்திய அணி எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக திட்டமிட்டு விளையாட வேண்டும்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -