என்னை அப்பவே கவர்ந்திட்ட.. உன் ஆட்டம் கண் கலங்க வச்சிடுச்சு – சச்சின் ரவி சாஸ்திரி நிதிஷ்குமாருக்கு வாழ்த்து

0
1770
Sachin

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சதம் அடித்த இளம் வீரர் நிதிஷ் குமாருக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்த்ததுடன், இந்திய அணியை நல்ல நிலைமைக்கும் நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து எடுத்துச் சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த போட்டி ஐந்தாவது நாளுக்கு செல்வது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தற்போது நிதிஷ் குமார் சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் அடித்ததின் காரணமாக, தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி ஐந்தாவது நாளுக்கு செல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மேலும் இந்த போட்டியில் வெற்றி, தோல்வி, ட்ரா என மூன்று முடிவுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி போட்டி ஐந்தாவது நாளுக்கு செல்வதும் மூன்று முடிவுகளுக்கும் வாய்ப்பு இருப்பதும் எப்போதாவது நடைபெறக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல செய்தி. இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை எந்த இடத்திற்கு நகர்த்திய நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் மனம் திறந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

கண் கலங்கி விட்டேன்

சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தில் கூறும் பொழுது “நிதிஷ் குமாரின் நினைவில் நிற்கப்போகும் ஒரு ஆட்டம் இது. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே அவர் என்னைக் கவர்ந்தார். அவரது அமைதி மற்றும் சுபாவம் சரியான நேரத்தில் வெளிப்பட்டது. முக்கியமான இன்னிங்ஸை விளையாடுவதற்கு அது இன்னும் மிக சிறப்பான முறையில் வந்திருக்கிறது. மேலும் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பான முறையில் விளையாடும் அவருக்கு அருமையான ஒத்துழைப்பு கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 121-0.. கையில் இருந்த மேட்சை தோற்ற இலங்கை அணி.. நியூசி கடைசி 7 ஓவரில் அசத்தல் வெற்றி.. முதல் டி20

“இது எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய இன்னிங்ஸ். 21 வயது இளைஞன் இந்த மாதிரி ஒரு நெருக்கடியான நிலைமையில், இப்படியான தன்மையை அழுத்தத்தின் கீழ் வெளிப்படுத்தியது கண்களில் நீரை வரவழைத்து விட்டது. இது சுத்த தங்கம். சிறப்பாக விளையாடினார்கள். இளைஞனே உன்னை கடவுள் ஆசீர்வதிப்பார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -