ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் வலிமையான இடத்தில் இருந்து இந்திய அணி மீண்டும் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 474 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 140 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் பும்ரா மீண்டும் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
ரோகித் மீண்டும் சொதப்பல்
இந்த நிலையில் இந்தியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா மூன்று ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் மீண்டும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வந்த கேஎல்.ராகுல் கம்மின்ஸ் வீசிய சிறப்பான பந்து ஒன்றில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து 158 பந்தில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். தேவையில்லாமல் ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து விராட் கோலி மீண்டும் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே விளையாடி 36 ரன்னில் வெளியேறினார்.
ஆகாஷ் தீப் விஷயத்தில் தவறான முடிவு
இந்த போட்டி முடிய 20 நிமிடம் இருக்கும் பொழுது ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்ததும் நைட் வாட்ச்மேன் ஆக ஆகாஷ் தீப்பை அனுப்பினார்கள். இவ்வளவு நேரம் இருக்கும் பொழுது அங்கு பேட்ஸ்மேனை அனுப்புவதுதான் சரியானது. இதைத்தொடர்ந்து அவர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தற்போது களத்தில் ரிஷப் பண்ட் 6, ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். இன்றைய நாள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : விராட் ரகானே செஞ்ச அதை.. ரோகித்தால செய்ய முடியாது.. சுறுசுறுப்பே இல்லாத மனுஷன் – எம்எஸ்கே பிரசாத் விமர்சனம்
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் முனையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஓவரின் கடைசி பந்தில் தேவையில்லாமல் ரன் ஓடி ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் விராட் கோலி பொறுமையாக இருக்க தவறு ஜெய்ஸ்வால் மீதுதான் இருக்கிறது.






