தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய இளம் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் உடல்ரீதியான முதலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
இன்று மெல்போன் மைதானத்தில் தொடங்கிய பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய இளம் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் மிக சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அந்த நேரத்தில் பத்தாவது ஓவர் முடிந்த பிறகு விராட் கோலி அவர் தோள் மீது தனது தோள் வைத்து இடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சாம் கான்ஸ்டாஸ் கூறிய சமாதானம்
இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த கான்ஸ்டாஸ், இந்த சம்பவம் நடந்த பொழுது தான் கையுறைகளை சரி செய்து கொண்டிருந்ததால் தனக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார். இப்ப நான் வந்து ஆனாலும் கிரிக்கெட்டில் இதுவெல்லாம் வழக்கமாக நடக்கக்கூடிய விஷயங்கள்தான் என்று சாதாரணமாக கடந்துவிட்டார்.
அதே சமயத்தில் வீரர்களிடையே சமாதானம் ஏற்பட்டாலும் கூட ஐசிசி சில விஷயங்களை அனுமதிக்காது. விராட் கோலி நேரடியாக உடல் ரீதியான மோதலை கொண்டு இருக்கின்ற காரணத்தினால், விராட் கோலிக்கு அபராத முதல் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிப்பது வரையில் வாய்ப்புகள் இருப்பதாக ஐசிசி விதிகள் கூறுகிறது.
ஐசிசி விதி என்ன சொல்கிறது?
முதலில் களம் நடுவர்கள் இது சம்பந்தமாக போட்டி நடுவர்களிடம் புகார் அளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து போட்டி நடுவர்கள் அந்தச் சம்பவத்தை வீடியோவில் முழுவதுமாக ஆராய்ந்து முடிவுக்கு வருவார்கள். ஒருவேளை விராட் கோலி வேண்டுமென்றே இதை செய்திருந்தால் பெரிய தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
விராட் கோலி உடல் ரீதியான மோதலை கொண்டிருப்பதால் இது லெவல் 2 குற்றத்தில் வருகிறது. இது உறுதிப்படுத்தப்பட்டால் போட்டி கட்டணத்தில் 50% அல்லது 100% அபராதம் விதிக்கப்படும். மேலும் டிமெட்ரிக் மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டு ஒரு சஸ்பென்ஷன் புள்ளி வழங்கப்படும். இதற்கு அடுத்து 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் வழங்கப்பட்டு நான்கு டிமெட்ரிக் புள்ளிகள் குறைக்கப்படும்.
இதையும் படிங்க : விராட் கோலி என் தோள்மேல் இடித்தார்.. அந்த நேரத்துல உண்மையில இதுதான் நடந்தது – சாம் கான்ஸ்டாஸ் தகவல்
இந்த நிலையில் போட்டி நடுவர் 4 டிமெட்ரிக் புள்ளிகள் கொடுத்தால், விராட் கோலி ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி அல்லது 2 வெள்ளைப் பந்து போட்டிகள் விளையாட தடை வரும். இந்த வகையில் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போகும். அதே சமயத்தில் இதை எதிர்த்து இந்திய அணி நிர்வாகம் அல்லது பிசிசிஐ ஐசிசியில் முறையீடும் செய்து கொள்ளலாம்.






