விராட் கோலி என் தோள்மேல் இடித்தார்.. அந்த நேரத்துல உண்மையில இதுதான் நடந்தது – சாம் கான்ஸ்டாஸ் தகவல்

0
92
Konstas

இன்று இந்தியா ஆஸ்திரேலியா எங்களுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் தனக்கும் விராட் கோலிக்கும் இடையே களத்தில் நடந்த மோதல் குறித்து சாம் கான்ஸ்டாஸ் விளக்கம் அளித்து இருக்கிறார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டு வரும் இரு அணிகளுக்கு இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் விராட் கோலி மற்றும் 19 வயதான அறிமுக வீரர் கான்ஸ்டாஸ் இருவரும் மோதிக்கொண்ட சம்பவம் போட்டியை பரபரப்பாகி இருக்கிறது.

- Advertisement -

களத்தில் என்ன நடந்தது?

இன்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் நல்ல அதிரடியாக முதல் போட்டியிலேயே அபாரமான முறையில் பேட்டிங் செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் வேகமாக கிடைத்தது. அவர் பும்ராவை குறி வைத்து அடித்து விளையாடியதால், இந்திய அணியின் பவுலிங் யூனிட் பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் விராட் கோலி ஓவர்களுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கான்ஸ்டாஸ் தோள் மீது இடித்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது. நடுவில் உஸ்மான் கவஜா வந்து அவர்களை பிரித்து விட்டார். தற்பொழுது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சாம் கான்ஸ்டாஸ் தந்த விளக்கம்

இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட கான்ஸ்டாஸ் அப்போது களத்தில் என்ன நடந்தது என்று கூறும் பொழுது “அந்த நேரத்தில் எங்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சிகள் இருந்தது. அதே சமயத்தில் நான் விராட் கோலி வருவதை கவனிப்பதற்கு முன்பாகவே எனது கையுறைகளை சரி செய்து கொண்டிருந்தேன். இதனால் விராட் கோலி வேண்டுமென்றே செய்தாரா? என்று தெரியாது. ஆனால் இதுவெல்லாம் கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய சகஜமான விஷயம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 19 வயசு எங்க பையன பார்த்தா.. அந்த இந்திய வீரர் மாதிரியே இருக்காரு – ஜஸ்டின் லாங்கர் பேட்டி

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இதில் எனது முதல் உள்ளுணர்வாக என்ன தோன்றுகிறது என்றால், விராட் கோலி கையில் பந்து வைத்துக்கொண்டு அதைப் பார்த்துக் கொண்டே நடந்தார். அவர் வருவதை கான்ஸ்டாஸ் பார்க்கவில்லை. எனவே இது தெரியாமல் நடந்து ஒரு விஷயமாகவே இருக்கிறது. அதே சமயத்தில் சாலையில் நடக்கும் பொழுது ஒருவர் எதிர்பார்த்து விட்டால் நாம் தள்ளி நடக்கிறோம் இல்லையா, அந்த மாதிரி விராட் கோலி சென்று இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -