இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட விராட் கோலி மிகத் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை காரணம் காட்டி விராட் கோலி குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ள நிலையில் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடர்ச்சியாக ஒரே மாதிரியான முறையில் அவர் ஆட்டம் இழந்து வருவதால் அவர் மீது தற்போது விமர்சனங்களை முன்னாள் வீரர்கள் குவித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி, இந்தத் தொடரில் ஸ்மித் சதம் அடித்தபோது முதல் பாதியில் ஒழுக்கத்துடன் விளையாடியதால் இரண்டாவது பாதியில் அவருக்கு விருப்பமான சுதந்திரமான ஷாட்கள் விளையாடி சதம் அடித்து மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி இருக்கிறார் எனவும் அதேபோல விராட் கோலி முதலில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஸ்மித் போன்று இதை செய்யுங்கள்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஸ்மித்திடம் நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள்? ஆரம்பத்தில் அவருக்கு இது ஒரு போராட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் காத்திருந்து மிகவும் பொறுமையாக விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். விராட் கோலியின் விஷயத்திலும் அப்படித்தான் நினைக்கிறேன். 30 முதல் 40 நிமிடங்களை தாண்டினால் விராட் கோலியும் சிறப்பாக செயல்பட முடியும். அவர் பார்மில் இல்லை என்று நான் கூறவில்லை.
இதையும் படிங்க:அஸ்வின் இல்லை.. குல்தீப்பை எடுக்காம.. தனுஷ் கோட்டியானை தேர்வு செய்ய இதுதான் காரணம் – ரோஹித் ஷர்மா பேட்டி
கோலி மற்றும் ஸ்மித் அவர்களது பார்மில் இருந்து தற்போது சற்று பின்தங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஜோ ரூட், வில்லியம்சன் போன்றவர்கள் தற்போது சிறப்பாக இருக்கின்றனர். மேலும் ஹாரி ப்ரூக் தற்போது சிறந்த வீரர்கள் வரிசையில் வெளி வருகிறார். மேலும் இளம் வீரர்கள் வெளி வருகிறார்கள் ஆனால் இவர்கள் கிளாஸ் பிளேயர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் மிகவும் பசியுடன் இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும்” என கூறி இருக்கிறார்.






