கோலி அவுட் ஆனாலும்.. இந்த ஒரு விஷயம் தொடர்ந்து செய்வார்.. போராட்ட குணம் மிக்கவர் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
122

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட விராட் கோலி கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் விராட் கோலி மூன்று சதங்கள் மட்டுமே அடித்திருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சிறப்பான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

அதாவது விராட் கோலிக்கு ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு தொடர்ந்து விளையாட முயற்சித்து அதில் ஆட்டம் இழந்து வருகிறார். முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி அத்தகைய ஷாட் விளையாட வேண்டாம் எனக் கூறியும் கோலி அதனை தொடர்ந்து விடாப்படியாக செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விராட் கோலி ஒரு போராட்ட குணம் மிக்க மனிதர் என்றும் ஒரு விஷயத்தை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார் என சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குறித்த தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “விராட் கோலி ஒரு போராட்ட குணம் மிக்க வீரர். கபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு மீண்டும் வலை பயிற்சியில் தன்னை செயல்படுத்த முயற்சித்து பயிற்சியை தொடங்கினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் விராட் கோலி தன்னை சிறப்பாக செயல்பட வைக்க முயன்று வருகிறார். அதைத்தான் தற்போது விடாப்பிடியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் எளிதாக எதையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து பார்ப்பார்.

இதையும் படிங்க:வெறும் 74 பந்து 148 ரன்.. ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்.. ரோஹித்துக்கு உண்டாகும் சிக்கல்.. முழு விபரம்

அனைத்தையும் எதிர்த்துப் போராடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவர் அத்தகைய ஒரு வீரர் தான். இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து பந்த வீசுவார்கள் என்று விராட் கோலிக்கு நன்றாக தெரியும். தேவைப்பட்டால் அவர் அந்த பந்தை விட்டு ஆடலாம் என்று நம்பும் அவர் அதை எப்படி அணுகப் போகிறார் என்பதுதான் அவர் இப்போது செய்து வரும் விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -