பும்ரா கிட்ட உலகத்துல யாராலும் முடியல.. ஆஸி இத மட்டும் தான் செய்யணும் – சைமன் கேடிச் பேட்டி

0
87
Katich

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேடிச் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பும்ரா பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும்? என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளின் முடிவில் 21 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவராக பும்ரா இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்திய தரப்பில் இரண்டே வீரர்கள்

நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய தரப்பில் பேட்டிங்கில் கேஎல்.ராகுல் மற்றும் பந்துவீச்சில் பும்ரா இருவர் மட்டுமே நம்பிக்கை தருபவராக இருக்கிறார்கள். இதில் பும்ரா பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு மோசமான விஷயமாக அமைந்திருக்கிறது. அவரை எதிர்கொண்டு விளையாடுவது பெரிய சவாலாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு அமைந்திருக்கிறது.

இதுகுறித்து சைமன் கேடிச் கூறும் பொழுது “எல்லா பேச்சுகளும் மிகவும் பாசிட்டிவாகவும் இண்டெண்ட் பற்றியும் இருப்பது எனக்கு தெரியும். இது நல்லது என்று நான் நினைக்கிறேன். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் உங்களுடைய பாசிட்டிவ் மற்றும் இன்டெண்ட் ஆகியவை பும்ரா பந்துவீச்சில் பவுண்டரிகள் அடிப்பதை நோக்கி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் பல மோசமான பந்துகளை வீசுவதில்லை”

- Advertisement -

உலகில் பல ஆண்களால் செய்ய முடியவில்லை

“உங்களுடைய நோக்கம் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதிலும், மேலும் சிறப்பான முறையில் டிபென்ஸ் விளையாடுவதிலும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் பத்தாவது ஓவர் தாண்டினால் மட்டும்தான் இன்டெண்ட் காட்டி விளையாடுவதற்கு வழி இருக்கிறது. அதற்கு முன்பாக பும்ரா இருக்கும்போது உங்களால் முடியாது. இதுதான் இங்கு பெரிய சவால்”

இதையும் படிங்க : இலங்கை டி20 ODI.. நியூஸி அணிகள் அறிவிப்பு.. புதிய கேப்டன்.. வெளிநாட்டில் பிறந்தவருக்கு வாய்ப்பு

“நீங்கள் பும்ராவுக்கு எதிராக ஆப் லென்த்தில் பவுண்டரிகள் அடிக்க முடியாது. ஏனென்றால் அவர் சிறந்த பவுலர். அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனால் இதுதான் உங்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கும். உலகின் பல ஆண்களால் அவரது பந்துவீச்சுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. நீங்கள் விக்கெட்டை தற்காத்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -