மந்தனா படைத்த மெகா சாதனை.. பவுலிங்கில் ரேணுகா அபாரம்.. வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள்.. இந்திய அணி சிறப்பான வெற்றி

0
758

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஜோடி மந்தனா மற்றும் பிரித்திகா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23.2 ஓவர்களில்110 ரன்கள் குவித்தது. பிரித்திகா 69 பந்துகளை எதிர் கொண்டு 40 ரன்னில் வெளியேறினார்.

அதற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் ஹர்லின் தியோல் மந்தனா உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மந்தனா 102 பந்துகளை எதிர் கொண்டு 13 பவுண்டரியுடன் 91 ரன்கள் குவித்தார். மேலும் மந்தனா இந்த காலண்டர் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 1600 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை லாரா 1593 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய வீராங்கனைகள் அபாரம்

மேலும் மற்ற வீராங்கனைகள் அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக விளையாட இந்திய அணி இறுதியாக 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய வீராங்கனைகளின் விக்கெட்டுகள் சீட்டு கட்டாய் சரிந்தது.

இதையும் படிங்க:பும்ராவால் வந்த வினை.. அந்த பையன நெனச்சா பாவமா இருக்கு – இங்கி மைக்கேல் வாகன் பேட்டி

இதில் சீமெய்ன் மட்டும் 21 ரன்கள் எடுக்க, இறுதியில் ப்ளக்சர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.அதற்குப் பிறகு களம் இறங்கிய வீராங்கனைகள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியாக 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியில் ரேணுகா சிங் 10 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றி பெற்றது.

- Advertisement -