இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரராக அறிமுகம் ஆகும் சாம் கான்ஸ்டாஸ் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் தோல்வியும், இரண்டாவது போட்டியில் வெற்றியும், மூன்றாவது போட்டி டிராவிலும் முடித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் நாதன் மெக்ஸ்வீனி தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் 10 ரன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 49 ரன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன் மட்டுமே அடித்திருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் இல்லாமல் தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். 97 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 107 ரன்கள் குறித்து மிகச் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். இருப்பினும் இந்திய அணி விளையாடிய பயிற்சி போட்டியில் அவர் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நான்காவது போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடுவது குறித்து பேசிய சாம் கான்ஸ்டாஸ் இந்திய அணிக்கு எதிராக சிறப்பான திட்டத்துடன் களமிறங்க போவதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
என்னுடைய திட்டம் இதுதான்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக என்னிடம் திட்டங்கள் உள்ளன. எனவே நான் தற்போது சிறப்பாக இருப்பது போல உணர்கிறேன். நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நான் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி மற்றும் அதற்குத் தகுந்தவாறு ரியாக்ட் செய்யப்போகிறேன். இதன் மூலமாக நான் இந்திய வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பேன். இது ஒரு பெரிய கவுரவ அறிமுகமாக இருக்கப் போகும்.
இதையும் படிங்க:13 வயது ஐபிஎல் வீரர்.. வைபவ் சூரியவன்ஷி முறியடித்த முக்கிய சாதனை.. விஜய் ஹசாரே டிராபி 2024-25.. முழு விவரம்
இது என்னுடைய கனவாகும். நான் இந்திய அணியை எதிர்கொள்வதில் மிகவும் உற்சாகமாகவும் அதே வேளையில் இது ஒரு சிறந்த சவாலாக இருக்கும் என்பதையும் உணர்கிறேன். நாதன் மெக்ஸ்வீனி மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இன்று காலை என்னை வாழ்த்தினார். நாங்கள் மிகவும் நெருங்கிய தோழர்களாக இருக்கிறோம். நான் அவருக்கு எல்லா நல்வாழ்த்துக்களை விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






