நீங்க பழைய மாதிரி வரணும் விராட்.. அதுக்கு இந்த ரெண்டு விஷயத்தை மட்டும் செய்யுங்க – புஜாரா வேண்டுகோள்

0
161
Pujara

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ரன்கள் எடுக்க என்ன மாதிரியான பேட்டிங் அணுகுமுறையை கொண்டு இருக்க வேண்டும் என இந்திய வீரர் புஜாரா கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார். ஆனால் நான்கு இன்னிங்ஸ்கலில் அவருடைய பேட்டிங் அணுகுமுறை மிகவும் மோசமாக இருந்தது. ஆப்ஸ் டெம்புக்கு வெளியே வரும் பந்துகளில் மிகவும் மலிவான முறையில் விக்கெட்டை கொடுத்திருந்தார்.

- Advertisement -

சீனியர்களுக்கு சிரமமாகும் ஆஸ்திரேலியா தொடர்

இந்திய சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடர் பெரிய கண்டமாக மாறி இருக்கிறது. இந்திய அணியின் மூத்த சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடரின் நடுவில் ஓய்வு பெற்று வெளியேறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதற்கு நடுவில் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் மட்டும் இல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என குரல்கள் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மீண்டும் மோசமான முறையில் ஆட்டம் இழந்தால் அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்கின்ற குரல்கள் என ஆரம்பித்து விடும். மேலும் ரவீந்திர ஜடேஜா வரையில் சில முன்னணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது. பலரின் தலைவிதியை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

புஜாரா தந்த அறிவுரை

விராட் கோலி பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசி இருக்கும் புஜாரா கூறும்பொழுது “ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் உள்ள சேனலில் அதிக முறை ஆட்டம் இழந்து இருப்பதை விராட் கோலி உணர்ந்து இருப்பார். இதிலிருந்து வெளியில் வருவதற்கு அவர் மைண்ட் செட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது முக்கியம். இதற்காக அவர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். பயிற்சியின் சிறப்பாக செயல்படுவதன் மூலம் அவர் இதிலிருந்து வெளியில் வர முடியும்”

இதையும் படிங்க : 127 ரன்.. அல்லா கசன்பர் 18 வயதில் சாதனை.. ஜிம்பாப்வே ஒயிட் வாஸ்.. ஆப்கான் அணி அபார வெற்றி

“விராட் கோலி ஒரு நல்ல தொடக்கத்தை பெறுவது மிகவும் முக்கியம். அவர் முதலில் ஒரு 20 ரன்களை எடுப்பதற்கு ஒரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அவர் 40 முதல் 50 பந்துகளை சந்திப்பார். இதனால் அவருக்கு களத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் அவர் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை களத்தில் செலவு செய்தால் மேற்கொண்டு பெரிய ரன்களுக்கு அவரால் செல்ல முடியும். எனவே இந்த விஷயங்களை விராட் கோலி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -