இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் இரண்டு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லாங்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
தற்போது நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அபாரமாக செயல்பட்டு வருகிறார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவரது பந்துவீச்சு மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. எனவே இவரை முற்றிலுமாக தவிர்த்து விட்டு மற்ற பவுலர்களை குறி வைக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் பும்ரா ஒரு வலது கை வாசிம் அக்ரம் போன்றவர் என்றும், இவரது பந்துவீச்சில் நான் விளையாடுவதை வெறுக்கிறேன் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இவரை எதிர்கொள்ள நான் வெறுக்கிறேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் பும்ராவின் பந்துவீச்சில் விளையாடுவதை வெறுக்கிறேன். அவர் வாசிம் அக்ரம் போன்றவர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு வலது கை வாசிம் அக்ரம் வகையான வீரராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் நீங்கள் சந்தித்த சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. பும்ரா இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய அபாரமான திறமையை பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க:என் அப்பா தெரியாம அப்படி சொல்லிட்டார்.. அவரை மன்னிச்சு விட்ருங்க – அஸ்வின் வேண்டுகோள்
நீங்கள் பந்தின் தையல் பகுதியைப் பிடித்து விரல்களில் இருந்து சரியாக வெளியேற்றினால் அது வலிமையான இரட்டை சக்தியாக மாறி விடுகிறது. அந்த நிலையில் எந்த ஒரு பேட்ஸ்மேன் நிலைமையும் மோசமான நிலைமைக்கு மாறிவிடும். அதைத்தான் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் செய்தார். இருப்பினும் நான் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வதை வெறுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இன்னும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அதிலும் பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






