இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய லெஜன்ட் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் இருவரும் பேட்டிங் குறித்து சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் இரண்டு முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் இடம் பந்து மெதுவாக வருகிறது என்று கூறி வம்பு இழுத்ததற்கு பிறகு அவரது பந்துவீச்சில் தொடர்ந்து ஆட்டம் இழப்பது கவலை அளிக்கிறது.
கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி
கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன் சதம் அடித்தாலும் கூட கடைசியில் அவர்களை ஒரு பந்துவீச்சாளர் வெளியேற்றவே செய்கிறார். இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் களத்தில் ஏதாவது சொன்னால் பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் தங்கள் பேட்டால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் இறுதியில் வெல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள், இதை நான் கொஞ்சம் தாமதமாகவே புரிந்து கொண்டேன். எனவே ஜெய்ஸ்வால் பந்துவீச்சாளர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று கூறியிருந்தார்.
உங்கள் முதுகை கடிக்கும்
இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய மட்டையால் பேச வேண்டும் வாயால் கிடையாது. உங்களிடம் பந்துவீச்சாளர் ஏதாவது சொன்னால் நீங்கள் அதற்கு பதில் சொல்லலாம். ஆனால் நீங்களாக எதையும் ஆரம்பிக்கக் கூடாது. இந்த விளையாட்டு உங்கள் முதுகில் கடிக்கக்கூடும்.மேலும் ஜெய்ஸ்வால் தன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : அஸ்வின் ஓய்வு பெற காரணம் இதுதான்.. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் – கோச் WV ராமன் பேட்டி
“ஜெய்ஸ்வால் தான் ஸ்கோர் அடிக்கும் பகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அவர் காற்றில் அடிப்பதை தவிர்த்து விட்டு தரையோடு விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் அவர் கொஞ்சம் மேலோட்டமாக பேட்டிங் செய்வது அவருடைய விக்கெட்டுக்கு அதிக பாதுகாப்பை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.






