இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை ஐந்தாவது நாளில் எப்படி செயல்பட்டு போட்டியை டிரா செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆவதற்கு அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறது. ஒருவேளை நாளை மழை குறுக்கீடு எதுவும் இல்லை என்றால் இந்த போட்டியில் ஏதாவது சில ஆச்சரியங்கள் அல்லது பரபரப்பு நிகழ்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
கால்களில் வலிமை இருக்கிறதா?
நாளைய போட்டி குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “இந்திய அணி பல ஆகி இருந்தால் விஷயங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கும் 200 ரன்களே இந்திய அணிக்கு பெரிய விஷயமாக மாறி இருக்கும். இப்போது ஆஸ்திரேலியா முதலில் வந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்திய அணி அவர்களை அதிக நேரம் பேட்டிங் செய்ய வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் கால்களில் வலிமை இருக்கிறதா?”
“நாம் ஸ்டார் மற்றும் கம்மின்ஸ் இருவரும் நீண்ட ஸ்பெல் வீசுவதை பார்த்தோம். மேலும் தற்பொழுது ஹேசில்வுட் இல்லை. உங்களுக்கு தற்போது மூன்றாவது பந்துவீச்சாளராக நாதன் லயன்தான் இருக்கிறார். இந்திய அணியை இரண்டு செஷன் விளையாட வைக்க அவர்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு பந்து வீசுவதற்கு அவர்களுடைய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு கால்களில் வலிமை இருக்கிறதா? என்று தெரியவில்லை”
இந்திய அணி இதைச் செய்ய வேண்டும்
“எந்த பேட்டருக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்பதில் இந்திய அணி தெளிவாக இருக்க வேண்டும். இந்திய அணி பவுண்டரிகள் கொடுக்கக் கூடாது. அவர்கள் இந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இது புதிய பந்திற்கான ஆடுகளம் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : கடவுளே நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்.. என்னை ஏன் நீக்கினார்கள்? – பிரித்வி ஷா வேதனை
“புதிய பந்தில் நல்ல இயக்கம் இருக்கிறது. எனவே இதை பயன்படுத்தி நாம் ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்தில் அவர்களுடைய மூன்று நான்கு விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.இதனால் அவர்கள் அதிக நேரம் விளையாடுவார்கள். அப்படி அவர்களை அதிக நேரம் நாம் விளையாட வைக்க வேண்டும். அப்படி செய்வதின் மூலமாக நாம் குறைவாக பேட்டிங் செய்தால் போதும். போட்டியை எளிதாக டிரா செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.






