நாங்க இந்த மாதிரி ஒரு பிளான் போட்டு இருந்தோம்.. ஆனா பும்ரா ஆகாஷ் தீப் முடிச்சு விட்டுட்டாங்க – வெட்டோரி பேச்சு

0
6969

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பத்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் மற்றும் மலை இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதை ஆஸ்திரேலியா பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவில் இருந்த பொழுதிலும், மழை மற்றும் ஆகாஷ் தீப் பும்ரா இடையிலான பத்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை அடைவதை தடுத்து இருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -

54 பந்தில் 39 ரன்கள்

இந்த போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கு கடைசி விக்கெட்டுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மிக சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப் 27 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். அவருடன் இணைந்து இருந்த பும்ரா ஆட்டம் இழக்காமல் 10 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்து விட்டது. தற்போது ஒன்பது விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஃபாலோ ஆன் செய்திருந்தால் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இருக்கும். ஃபாலோ ஆன் செய்த காரணத்தினால் இந்திய அணியை இன்று மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வைத்திருக்கும். மேலும் தொடர்ந்தும் நாளை பந்துவீசி இந்திய அணியை மழைக்கு நடுவே சுருட்ட முயற்சி செய்திருக்கும். ஆனால் இதை ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

- Advertisement -

இனி வெற்றி பெற வாய்ப்பு இல்லை

இது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறும்பொழுது “இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு இருந்த ஒரே வழி இந்திய அணியை பாலோ ஆன் செய்வது மட்டும்தான். ஆனால் இந்தியாவின் கடைசி விக்கெட்டை எங்களால் வீழ்த்த முடியாதது விரக்தியாக அமைந்தது. நாங்கள் ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்திய பொழுது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தோம். ஆனால் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் எங்கள் வாய்ப்பை முடித்து வைத்து விட்டார்கள்”

இதையும் படிங்க : ரோகித் நீங்க என்ன செய்றிங்க?.. அந்த பந்தை இப்படித்தான ஆடனும்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – புஜாரா விமர்சனம்

“துரதிஷ்டவசமாக மழையின் காரணமாக இந்த போட்டியில் இழந்த நேரம் ஆட்டத்தை டிராவில் முடிக்க வைக்கிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் ரன்கள் முக்கியமானதாக இருக்கும். நாங்கள் முதல் இன்னிங்ஸ் ரன்னை பயன்படுத்திக் கொள்ளவும், இந்த ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்தோம். கடைசியில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -