இந்த தலைமுறை வீரர்கள் நாங்கள் இப்படித்தான்.. அத மட்டும் செஞ்சிட்டா ஆஸிய ஜெயிச்சிடுவோம் – சுப்மன் கில் பேட்டி

0
363

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. எனவேஇரண்டு அணிகளும் இந்த போட்டியில் கடுமையாக மோதும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

பிரிஸ்பேன் காபா வரலாறு

நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும். இங்கு பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்த அணி தோல்வி அடைந்து வந்திருக்கிறது. இறுதியாக இந்திய அணி இன்று பெற்ற வெற்றியின் போதும் இரண்டாவதாக பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கின்ற காரணத்தினால், இது மூன்று போட்டிகள் கொண்ட தொடராக தற்பொழுது மாறி இருக்கிறது. எனவே மூன்று போட்டியில் இரண்டு போட்டியை வெல்லும் அணி தொடரை வெல்லும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த தலைமுறை பேட்ஸ்மேன்கள்

இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் சுப்மன் கில் கூறும் பொழுது “இங்கே விளையாடப்படும் தீவிரம்தான் இதை சவாலானதாக மாற்றுகிறது. இங்கு மன தீவிரமும் உடல் தகுதியும் மிகவும் முக்கியம். இங்கு கண்டிஷன் மிகவும் சவால் ஆனவை. நடுவில் 35 ஓவர்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். எனவே இங்கு போட்டியிடுவது நம் மன ஆரோக்கியத்தை பற்றியது”

“இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு பிறகு நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட் ஆக சேர்ந்து எப்படி சிறப்பாக செயல்படுவது என்பதை பற்றிதான் அதிகம் பேசினோம். பொதுவாக ஜெயிக்கவில்லை என்றால் பயம் வரும். ஆனால் நாங்கள் தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றுஇருக்கிறோம். இந்த தலைமுறை வீரர்கள் யார் பந்து வீசுகிறார்கள் என்பதை பார்ப்பதில்லை. பந்து எப்படி வருகிறது என்பதை மட்டும்தான் பார்க்கிறார்கள்”

இதையும் படிங்க : 12 இன்னிங்ஸ் 142 ரன்.. நான் ரோகித் சர்மாவாக இருந்தால் இதைத்தான் செய்வேன் – ரிக்கி பாண்டிங் கருத்து

“தற்பொழுது இது மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாறி இருக்கிறது. நாங்கள் மூன்றாவது போட்டியில் வென்றால், அதற்கு அடுத்து சிட்னி மற்றும் மெல்போன் போட்டிகளில் எங்களுடைய கையே ஓங்கி இருக்கும்”

- Advertisement -