ஐபிஎல் தொடரில் இருக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கொண்டு வர கூடாது என ஜாக் காலிஸ் கூறியிருக்கிறார். மேலும் இதற்கான காரணம் குறித்தும் அவர் விளக்கி இருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடருக்கு அடுத்த நிலையில் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் இருந்து வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நல்ல பொருளாதாரம் கிடைப்பதால், அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் முதலீடு செய்து சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் தாக்கம்
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் இன்று தனிப்பட்ட முறையில் டி20 லீக்குகளை நடத்துவதற்கு ஐபிஎல் தொடரின் வெற்றி மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒரு படி மேலே போய் ஐபிஎல் முதலாளிகளுக்கு சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கதவுகளை திறந்து விட்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கிறது.
தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் மொத்தம் ஆறு அணிகள் இருக்கின்றன. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி இருக்கும் முதலாளிகளே வாங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த முறை தினேஷ் கார்த்திக் இந்தியாவில் இருந்து சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் பங்கேற்கவும் இருக்கிறார். இதன் காரணமாக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் இன்னும் கூடுதலான பார்வையாளர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தரம் வேற லெவல்
இதுகுறித்து ஜாக் காலிஸ் பேசும்பொழுது “தற்போது ஐபிஎல் தயாரிப்பு வேறு லெவலில் இருக்கிறது. எங்களுடைய டி20 லீக்கை ஐபிஎல் தொடருக்கு நெருக்கமாக நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம். இதற்கு நீங்கள் மிகவும் வலிமையான அணிகளை உருவாக்க வேண்டும். ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. உங்கள் உள்நாட்டு சிறந்த வீரர்களுடன் வெளிநாட்டு சிறந்த வீரர்கள் விளையாடுவது முக்கியம். பார்வையாளர்களை கவர்வதோடு அணிகளை வலிமையாக்குகிறது”
இதையும் படிங்க : பாகிஸ்தான் ODI.. மாஸான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. 18 வயது அடுத்த ஸ்டெய்ன் சேர்ப்பு
“அதேசமயத்தில் எனக்கு ஐபிஎல் தொடரில் இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதி பிடிக்கவில்லை. அது ஆல் ரவுண்டர்கள் உருவாவதை தடுத்துவிடும். தற்போது எங்களுக்கு சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு ஆல்ரவுண்டர்கள் தேவையாக இருக்கிறார்கள். நாங்கள் ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் இந்த விதி கொண்டு வரப்படாது” என்று கூறியிருக்கிறார்.






