இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல தான் விரும்புவதாகவும் அதே சமயத்தில் அது கடினமானது என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
தற்பொழுது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சி இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலை இருக்கிறது. மூன்று போட்டியில் இரண்டு போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு இது கடினம்
இந்த நிலையில் தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியுமா? முடியாது என்றால் இந்திய அணி இந்தத் தொடரில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “தற்போது இந்திய அணி இந்த தொடரை 4-1கணக்கில் வெல்ல முடியுமா? இது எனக்கு மிகவும் கடினமாக தோன்றுகிறது. எனவே தற்போது இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.அப்பொழுதுதான் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்றத்தின் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் அடங்க ஆரம்பிக்கும்”
இந்திய அணி இறுதி போட்டியில் இருக்க விரும்புகிறேன்
மேலும் பேசியுள்ள பசித் அலி “இங்கிலாந்து அணியை தங்கள் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் ஒயிட் வாஸ் ஆகும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் இதுதான் கிரிக்கெட். நியூசிலாந்து அணி இடம் தொடரை இழந்ததற்கான விளைவுகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது”
இதையும் படிங்க : 3வது டெஸ்ட்.. இந்திய அணியின் பயிற்சியில் 2 முக்கிய விஷயங்கள்.. கவலை தரும் செய்திகள்.. வெளியான தகவல்கள்
“இந்தியா தற்பொழுது அவுட் ஆகிவிட்டால், ஆஸ்திரேலியாவுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்வதற்கு இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு ஐந்து போட்டிகள் இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு மூன்று போட்டிகள் மட்டுமே இருக்கிறது. பார்ப்போம் இறுதிப் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






