583 ரன் டார்கெட்.. ஜோ ரூட் அட்டகாச சதம்.. இங்கிலாந்து பிரம்மாண்ட வெற்றி.. நியூசி சொந்த மண்ணில் தோல்வி

0
445
Root

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்பொழுது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

ஹாரி புரூக் ஆட்ட நாயகன் ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது. இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் தாக்குப்பிடித்து விளையாடி 115 பந்தில் 123 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியால் அந்த அணி 280 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. கேன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் 92, ஜேக்கப் பெத்தேல் 98, ஜோ ரூட் 36 ஆவது சர்வதேச டெஸ்ட் சதம் அடித்து 16 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணிக்கு 583 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இங்கிலாந்து பிரம்மாண்ட வெற்றி

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டாம் ப்ளுண்டல் சிறப்பாக விளையாடி அதிரடியாக 102 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 259 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : ரோஹித் இதுல ரொம்ப வீக்.. பேட்டை வெளிய வெச்சா பந்து படும்னு நம்புறாரு – சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சனம்

இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்று இருந்ததால் இந்த போட்டியையும் 323 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முக்கிய காரணமாக இருந்தார். முதல் போட்டியில் முக்கியமான நேரத்தில் அதிரடி சதம் அடித்த ஹாரி புரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

- Advertisement -