ரிஷப் பண்ட்தான் என்னோட பெரிய எதிரி.. அதுக்கு முக்கிய காரணம் இதுதான் – ஜஸ்டின் லாங்கர் பேச்சு

0
76
Langer

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனக்கு மிகப்பெரிய எதிரியாக விளங்கினார் என ஆஸ்திரேலிய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கடைசி இரண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணங்கள் குறித்து அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டை மாற்றும் ஐபிஎல்

ஐபிஎல் தொடர் வருவதற்கு முன்பாக உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரே அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. ஐசிசி எப்போதாவது சிறப்பு தொடர்கள் நடத்தும் பொழுது மட்டுமே பல அணியில் இருக்கும் வீரர்களும் ஒரே அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் வந்ததற்குப் பிறகு பல அணிகளின் வீரர்களும் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இதனால் வீரர்களுக்கு இடையே நட்பு உருவாகிறது. இதன் காரணமாக வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் பொழுது எதிரணியில் இருக்கும் தங்களது நண்பர்களிடம் சுமூகமாக பழகுகிறார்கள். பழைய எதிர்ப்பு மனநிலையை பார்க்க முடிவதில்லை.

- Advertisement -

இப்போது ரிஷப் பண்ட் எதிரி இல்லை

தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். இதே அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறார். எனவே இவருடன் சேர்ந்து வேலை செய்வது குறித்து ஜஸ்டின் லாங்கர் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : 180 ரன்.. ஸ்டார்க் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை.. இந்திய அணிக்கு கிடைத்த சிறு சாதகம்.. 2வது டெஸ்ட்

இது குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறும்பொழுது “கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் என்னை ரிஷப் பண்ட் பெரிய அளவில் வேட்டையாடிவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட்டை வாங்கியதின் மூலமாக அவர் எனக்கு நண்பராக மாறிவிடுவார் என்று நம்புகிறேன். இப்பொழுது அவர் எனக்கு ஒரு நல்ல துணை முன்பு போல எதிரி கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -