2011 உலக கோப்பை.. தோனி செஞ்ச விஷயம் மர்மமா இருக்கு.. அது எனக்கு சுத்தமா புரியல – ஹர்பஜன் சிங் கேள்வி

0
767

இந்திய கிரிக்கெட் அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையும் 2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையையும் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்த இரண்டு உலகக் கோப்பைகள் வென்ற போதிலும் அந்த அணியில் ஹர்பஜன் சிங் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

இந்த சூழ்நிலையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வைத்து சில முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

2007ம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு திரும்பவும் தோனி தலைமையில் ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியாவில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. 1983ஆம் ஆண்டு கபில்தேவ் அவர்களுக்கு பிறகு தோனி ஒரு நாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.

அந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் முக்கிய வீரராக முன்னணி சுழற் பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் திகழ்ந்தார். இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனியோடு 10 ஆண்டுகளாக அவர் பேசுவதில்லை என்று பேசியிருக்கும் அவர், 2011ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு ஒரு போட்டியில் கூட அதே அணி திரும்பவும் விளையாடாதது ஏன் என்ற கேள்வியை தற்போது எழுப்பி இருக்கிறார். மேலும் சில கேள்விகளையும் முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த விஷயம் எனக்குப் புரியவில்லை. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள் இறுதிப்போட்டி வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அதற்குப் பிறகு ஒரு போட்டியில் கூட அந்த அணி மீண்டும் ஒன்று சேரவில்லை இது எனக்கு புரியாத மர்மமாக இருக்கிறது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. இந்த விஷயம் சரி செய்யப்பட வேண்டும் என்று விரும்பினேன். உலகக் கோப்பையில் விளையாடிய அணி திரும்பவும் ஒரு போட்டியில் கூட இணைந்து விளையாடாதது துரதிஷ்டவசமானது.

இதையும் படிங்க:இந்திய அணி எச்சரிக்கையா இருங்க.. கம்மின்ஸ் இதை கட்டாயம் கொண்டு வருவாரு – மைக்கேல் வாகன் கணிப்பு

2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் வெற்றி பெற்ற அணி மிகவும் அற்புதமானது. ஆனால் அதற்குப் பிறகு அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏன் என்று எனக்கு புரியவில்லை. விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களாக இருப்பினும் அவர்கள் நல்லவர்களாக இருக்கவில்லை.அந்த அணியில் இருந்த சில வீரர்களுக்கு இது கடைசி உலக கோப்பை என்று தோன்றியது. ஆனால் விளையாடக்கூடிய வீரர்களும் சிலர் இருந்தனர். வயதாகி இருந்தாலும் நாங்கள் விளையாடக்கூடிய சூழ்நிலையிலேயே இருந்தோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -