ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பம்ராவுக்கு எதிராக சிறப்பான வழியை கண்டுபிடித்து வருவார்கள் என ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒரு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறார். அவரது பந்துவீச்சில் எல்லா நேரத்திலுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதன் காரணமாக அவருக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இது அதிகப்படியான எதிர்வினை
இதுகுறித்து ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரி கூறும்பொழுது “ஒரு தோல்விக்கு பின்னால் இது மிகப் பெரிய எதிர்வினையாக எங்களுக்கு அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய தோல்வி என்பதால் விமர்சனம் அதிகமாக வைத்து வருகிறார்கள். நாங்கள் தொடர்ந்து விளையாடினால் நான்கைந்து டெஸ்டில் எங்களுடைய கிரிக்கெட் பாணி என்னவென்று நன்றாக தெரியும். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்”
“நாங்கள் விளையாடும் முறை வெற்றி அளிக்கும் என்பதற்கு சாட்சியாக நாங்கள் ஏற்கனவே வெற்றிகள் பெற்றிருக்கிறோம். உள்நாட்டில் நாங்கள் எப்பொழுதும் அமைதியாக இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை வெளியேறி சிறந்த கிரிக்கெட்டை விளையாட உற்சாகமாகவும் இருக்கிறோம். வெள்ளியன்று அந்த வாய்ப்பை பெறுவோம்”
பும்ராவுக்கு எதிராக செய்வார்கள்
“பும்ரா வெளிப்படையாக ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். அவர் அதை பல வருடங்களாக செய்து வருகிறார். அதே சமயத்தில் எங்களுடைய பேட்டர்கள் உலக தரமானவர்கள் அவர்கள் ஒரு வழிமுறையை கண்டுபிடித்து அவருக்கு எதிராக கொண்டு வருவார்கள். பந்து பழைய ஆனதும் இரண்டாவது ஸ்பெல்லில் அவருக்கு எதிராக கொஞ்சம் ஆழமாக செல்ல முடியும்”
இதையும் படிங்க : 61 ரன் 9 விக்கெட்.. பதிலடி தந்த பங்களாதேஷ்.. சொந்த மண்ணில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி.. 2வது டெஸ்ட்
“டிராவிஸ் ஹெட் முதல் டெஸ்ட் போட்டியின் போது பும்ரா பந்துவீச்சில் கொஞ்சம் எதிர் பஞ்ச் செய்ததை நாம் பார்த்தோம். எனவே அவருக்கு எதிராக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நல்ல வழியை கண்டுபிடித்து விடுவார்கள். மேலும் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.






