ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் எந்த இடங்களில் விளையாடினால் சரியாக இருக்கும் என உஷாரா கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. இந்த நிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பி வந்திருப்பதால், மேலும் அவர் துவக்க ஆட்டக்காரராக இருப்பதால் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் ஏற்படுவது கட்டாயமாக மாறி இருக்கிறது.
கேஎல்.ராகுலுக்கு இதையாவது செய்ய வேண்டும்
இதுகுறித்து புஜாரா கூறும்பொழுது “தற்போது இந்திய ஓபனிங் ஜோடியை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டால் ரோஹித் சர்மாவை மூன்றாவது இடத்தில் கலந்திருக்கலாம். கில் ஐந்தாவது இடத்தில் வரலாம். அதே சமயத்தில் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரராக வருவதாக இருந்தால், நாம் கேஎல்.ராகுலை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். ஏனென்றால் அவருடைய ஆட்டம் முறைக்கு அது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்”
“அதே சமயத்தில் கில்லுக்கு பேட்டிங் வரிசையில் ஐந்தாம் இடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த இடத்தில் பந்து விளையாடும் பொழுது பந்து தேய்ந்து பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்கும். எனவே கில் அங்கு விளையாடும் பொழுது அவரால் சில ரன்களை எளிதாக எடுக்க முடியும்”
பவுலிங் யூனிட்டை எதுவும் சொல்ல முடியாது
“இந்திய பவுலிங் யூனிட் பற்றி எந்தகேள்வியும் கிடையாது. இந்த பந்துவீச்சு தாக்குதல் நமக்கு வெற்றியை கொடுத்து இருக்கிறது. நம்முடைய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஹர்ஷித் மற்ற இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சப்போர்ட் கொடுத்தார். அவர்நன்றாக பந்து வீசியதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் முதல் ஆட்டத்தில் விளையாடும் பொழுதும் பந்தை நன்றாக ஏற்றி வீசி முடித்தார்”
இதையும் படிங்க : 71-4 டு 319-5.. ஹரி புரூக் அட்டகாச பேட்டிங்.. முன்னிலையில் இங்கிலாந்து.. நியூசிக்கு சொந்த மண்ணில் பின்னடைவு
“வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் கீழ் வரிசையில் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதால் அவருடைய பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். அவர் ஆரம்பத்தில் பந்துவீச்சில் கொஞ்சம் பின் தங்கி இருந்தாலும், இறுதியில் சிறப்பாக வந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்” என்று கூறியிருக்கிறார்.






