ஆஸி மீடியா பும்ராவ உட்கார வச்சிக்கிட்டே அவரை மதிக்கல.. அவங்க எண்ணமே வேற – நாசர் ஹுசைன் பேட்டி

0
839
Nasser

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் பந்துவீச்சாளரான பும்ராவுக்கு பெரிய முக்கியத்துவத்தை அவரை முன்னால் வைத்துக் கொண்டே தரவில்லை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா மொத்தம் எட்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலிய மீடியாக்களின் டார்கெட்

இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய மீடியாக்கள் இந்திய அணியை கண்டு கொள்ளாமல் கிடையாது. ஆனால் அவர்கள் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு மிக அதிகபட்ச முக்கியத்துவத்தை கொடுத்தார்கள். தினம்தோறும் அவர் குறித்த செய்தி செய்தித்தாள்களின் பின்பக்கத்தில் முழுவதுமாக இடம் பெற்றது.

இது மட்டும் இல்லாமல் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கும் ஆஸ்திரேலியா மீடியாக்கள் நல்ல முக்கியத்துவத்தை கொடுத்தன. ஆனால் இந்திய பவுலிங் யூனிட் பற்றி எந்த விதமான பெரிய செய்திகளும் இடம்பெறவில்லை. குறிப்பாக உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா பற்றி அவர்கள் எதுவுமே பேசவில்லை.

- Advertisement -

நான் உன்னிப்பாக பார்த்தேன்

இதுகுறித்து நாசர் ஹுசைன் கூறும்பொழுது “பும்ராவிடம் உள்ள அந்த ஸ்லோயர் பந்து, யார்க்கர், பவுன்சர் ஆகியவற்றை குறித்து நான் போட்டிக்கு முன்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொழுது நான் அதை பார்த்துக் கொண்டிருந்தேன்”

“அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பும்ராவை வைத்துக்கொண்டே பத்திரிகையாளர்கள் மொத்தமாக விராட் கோலிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இங்கு ரோகித் சர்மா இல்லை என்பதால் அவர் பற்றி பேசவில்லை. மேலும் ஸ்மித் எவ்வளவு ரன்கள் எடுப்பார் என்று பேச்சு இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே கவனம் கொடுத்தது. அவர்கள் பந்துவீச்சாளரான பும்ரா பற்றி பேசவே இல்லை”

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட்.. நியூசிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இந்திய தொடர் ஹீரோக்களுக்கு இடமில்லை.. அதிரடி மாற்றம்

“பும்ராவின் புள்ளி விவரங்கள் தற்போது சிட்னி டெஸ்டில் அவர் குறித்த முக்கியத்துவத்தை தருவதற்கு போதுமாக இருக்கிறதா இல்லையா? 20 ஓவர்களை வீசக்கூடிய பும்ரா நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானவர். தற்போது ஆல் ஃபார்மேட் கிரிக்கெட்டில் அவரைப் போல சிறந்த பந்துவீச்சாளர் வேறு யாரும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -