இந்திய அணியின் பும்ரா பந்துவீச்சு ஆக்சன் குறித்து தவறான முறையில் பேசுகின்ற முட்டாள்தனத்தை சிலர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி கேப்டன் பும்ராவின் அதிரடி பந்துவீச்சின் காரணமாக வென்று அசத்தியிருக்கிறது. அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 8 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.
திடீரென பரவிய அவதூறுகள்
பும்ரா பந்தை மிகவும் தாமதமாக ரிலீஸ் செய்யக்கூடியவர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து அவருடைய முழங்கை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வளைவதாக சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்ப ஆரம்பித்தார்கள். இது இன்னும் சிலரால் எடுத்து மிக வேகமாக பரப்பப்பட்டது.
அதே சமயத்தில் பும்ரா பந்தை தாமதமாக ரிலீஸ் செய்யும் பொழுது அவரது முழங்கை சரியான அளவில் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறது என பல கிரிக்கெட் வல்லுனர்கள் உண்மையை வெளிப்படுத்தினார்கள். இருந்தபோதிலும் சில பக்கத்தில் இருந்து தொடர்ந்து பும்ரா மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
முட்டாள்தனத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்
இது குறித்து கிரேக் சேப்பல் கூறும் பொழுது “தயவு செய்து பும்ராவின் பவுலிங் ஆக்சன் குறித்து கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். அவருடைய பவுலிங் ஆக்சன் தனித்துவமானது மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி தூய்மையானது. இப்படியான அவதூறு கேள்விகளை கேட்பது ஒரு சாம்பியன் வீரரையும் விளையாட்டையும் அவமதிப்பது ஆகும்”
இதையும் படிங்க : பும்ராவை சமாளிக்கிறது கஷ்டம்.. எங்களோட பிரச்சனை அவர்கிட்ட வேற இந்த விஷயம்தான் – ஆஸி கோச் பேட்டி
“இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சில கற்பனையான கணிப்புகள் இருந்தன. அந்த ஞானிகள் இந்தியாவின் திறமையை குறைவாக மதிப்பிட்டார்கள். தற்போது அந்த கணிப்புகளுக்கு எதிராக எல்லாம் நடந்திருக்கிறது. பும்ரா தனது பந்துவீச்சில் சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






