295 ரன்.. இந்தியா படைத்த புதிய வரலாறு.. ஆஸி அணிக்கு முதல் முறை நடந்த சோகம்.. பும்ரா தலைமையில் அபார வெற்றி

0
690
Bumrah

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கில் 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார் ஹேசில்வுட் கைப்பற்றினார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 104 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மிட்சல் ஸ்டார்க் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். பும்ரா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்திய ஓபனர்களின் 2வது இன்னிங்ஸ்

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல்.ராகுல் 77, ஜெய்ஸ்வால் 161 என ரன்கள் எடுத்து 201 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை உறுதியாக வெல்வதற்கான சூழல் அமைந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து நான்காவது வீரராக களத்திற்கு வந்த விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய கேப்டன் பும்ரா டிக்ளர் செய்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

மீண்டும் அசத்திய இந்திய பவுலிங் யூனிட்

இதற்கு அடுத்து நேற்று விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி 12 ரன் எடுத்து மூன்று விக்கெட்டை இழந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணிக்கு ஸ்மித் 17, ஹெட் 89, மிட்சல் மார்ஸ் 47, அலெக்ஸ் கேரி 36 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக 58.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 238 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியஅணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மற்றும் சிராஜ் 3, வாஷிங்டன் சுந்தர் 2, ஹர்ஷித் ராணா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : ஹேசில்வுட் அதை செய்வார் என்று எனக்கு தெரியும்.. கேஎல் ராகுல் இந்த உதவிய செஞ்சார் – சதம் பற்றி ஜெய்ஸ்வால் பேட்டி

மேலும் இந்த போட்டி நடைபெற்ற ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று இருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மைதானத்தில் அந்த அணிக்கு முதல் தோல்வியை இந்தியா கொடுத்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு இது இரண்டாவது பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -