நேற்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தன்னை வாங்கியது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் உணர்வுபூர்வமாக பேட்டியளித்திருக்கிறார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடி ரூபாய் கொடுத்து அதிரடியாக கைப்பற்றியது. 10 வருடங்களுக்கு மேல் கழித்து மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய பழைய அணிக்கு திரும்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை ஒரு வட்டம்
இதுகுறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “வாழ்க்கை ஒரு வட்டம் என்று கூறுகிறார்கள். 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நான் அவர்களுக்காக விளையாடியிருக்கிறேன். அவர்களுக்காக நான் எப்பொழுதும் கடமைப்பட்டு இருக்கிறேன். சிஎஸ்கே அணியில் நான் கற்றுக்கொண்டதுதான் என்னை இந்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் உயர்த்தி இருக்கிறது. நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது”
” என்னை சிஎஸ்கே விலை கொடுத்து வாங்கியது நான் அந்த அணிக்காக விளையாட இருப்பது எல்லாம் தாண்டி, நான் ஏக்கமாக உணர்கிறேன். ஏனென்றால் 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் சிஎஸ்கே என்னை வாங்குவதற்கு எவ்வளவு போராடியது என்பது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உணர்வுபூர்வமாக இருக்கிறது”
சிஎஸ்கே ரசிகர்கள் கத்தவே இல்லை
“அன்பு டென்னின் ரசிகர்களின் பேனர்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். நான் அங்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். நான் பந்து வீசும் பொழுது பேட்டிங் செய்யும்பொழுது சிஎஸ்கே ரசிகர்கள் கத்தவோ கொண்டாடவோ மாட்டார்கள் என்பதை நான் உணர்ந்தேன்”
இதையும் படிங்க : 183 ரன்.. 9 விக்கெட்.. போராடும் பங்களாதேஷ் அணி.. வெஸ்ட் இண்டீஸ் கலக்கல் பவுலிங்.. முதல் டெஸ்ட்
“சிஎஸ்கே-க்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ந்து வரும் ரசிகர்களுக்கு முன்னால் விளையாடுவதற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். தோனி மற்றும் ருதுராஜ் இருவருடன் இணைந்து விளையாடுவதற்கும் நான் ஆவலாக காத்திருக்கிறேன்” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.






