மாஸ் காட்டிய சிஎஸ்கே.. 1 ஆர்டிஎம்.. 4 வீரர்கள்.. அஸ்வின் வரை தட்டி தூக்கி.. மாஸ்டர் பிளான்

0
528
Ashwin

நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு ஆர்டிஎம்ஐ வைத்துக்கொண்டு சிஎஸ்கே வழக்கம் போல மேஜிக் செய்து நான்கு முக்கிய வீரர்களை வாங்கி அசத்தியிருக்கிறது.

இந்த முறை சிஎஸ்கே கையில் 55 கோடி ரூபாயுடன் மெகா ஏலத்திற்கு வந்தது. பெரிய அளவில் பணம் வைத்திருந்த அணிகள் ஏலத்தில் முதலில் மோதி கொண்டிருந்ததால் சிஎஸ்கே அணியால் எந்த வீரரையும் வாங்க முடியவில்லை. இதனால் வழக்கம்போல் பொறுமையாக அமர்ந்திருந்தது.

- Advertisement -

கான்வேவை வைத்து போட்ட திட்டம்

சிஎஸ்கே அணி நடப்பு ஏலத்தில் விக்கெட் கீப்பிங் ஓபனிங் பேட்ஸ்மேன் கான்வேவுக்கு ஆர்டிஎம்ஐ பயன்படுத்தாமல் நேரடியாகவே ஏலத்தில் சென்றது. இறுதியாக பஞ்சாப் அணியுடன் போட்டியிட்டு அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கி விட்டது.

இதைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்தரா ஏலத்திற்கு வர அவரை மீண்டும் இருந்த ஒரு ஆர்டிஎம்ம்மை பயன்படுத்தி பஞ்சாப் அணியிடம் இருந்து வெறும் 4 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது. இதனால் 10.25 கோடி ரூபாய்க்கு மிக முக்கியமான இரண்டு வீரர்களை வழக்கம் போல் தட்டி தூக்கி அசத்தியது.

- Advertisement -

அஸ்வினை உள்ளே கொண்டு வந்து அசத்தல்

இதில் இந்திய வீரரான ராகுல் திரிபாதியை கொல்கத்தா அணி இடம் இருந்து வெறும் 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 13.65 கோடி ரூபாய்க்கு மூன்று முக்கிய வீரர்களை வாங்கி விட்டதால் ஏறக்குறைய சிஎஸ்கே அணிக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் மிதியாகியது.

இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்தில் வந்த பொழுது தைரியமாக அவர் மீது தொடர்ந்து சிஎஸ்கே சென்றது. இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பணியிடமிருந்து 9.75 கோடி ரூபாய்க்கு ரவிச்சந்திரன் அஸ்வினை சிஎஸ்கே வாங்கியது.

இதையும் படிங்க : டெல்லி பிரில்லியன்டா செய்த ஒரு காரியம்.. லக்னோவுக்கு 6.25 கோடி ரூபாய் நஷ்டம்.. ஐபிஎல் ஏலத்தில் என்ன நடந்தது?

திடீரென ஏலத்திற்குள் வந்த சிஎஸ்கே அதிரடியாக செயல்பட்டு வெறும் 23.40 கோடி ரூபாய்க்கு நான்கு வீரர்களை வாங்கியது. ஏற்கனவே ஐந்து வீரர்களை தக்க வைத்ததால் தற்பொழுது அந்த அணியின் கையில் 9 வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் கையில் 31 கோடி ரூபாய் பணமும் இருக்கிறது. இதனால் இந்த முறை சிஎஸ்கே மிகவும் வலிமையாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -