ஸ்மித் கோலியை இதை வைத்து கம்பேர் செய்யக்கூடாது.. அது இவர்கள் திறமை அல்ல – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

0
58

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற ஆஸ்திரேலியா சிறப்பான திட்டங்களை தீட்டி உள்ளது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ஸ்மித் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் சில முட்டிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று நடைபெற உள்ள இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பெரும்பாலும் விராட் கோலி மற்றும் ஸ்மித் பேட்டிங்கையே பெரிதும் நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த இரண்டு வீரர்களும் சமீப காலமாக பார்ம் இன்றி பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்கள்.

இந்த இரண்டு அணிகளும் கடுமையான போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டுமானால் பேட்டிங்கில் இந்த இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. விராட் கோலி ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் தனது திறமை என்னவென்று நிரூபித்திருக்கிறார். அதேபோல ஸ்மித் தனது சொந்த மண்ணில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடர் மூலமாக இரண்டு வீரர்களும் திரும்பவும் பார்முக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெறும் நம்பர்களை வைத்து இந்த இருவரின் திறமையை மதிப்பிடக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நம்பர்களை வைத்து மதிப்பிடக்கூடாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் எண்களை வைத்து பார்க்கும் போது விராட் கோலியை விட ஸ்மித் ஒரு பெரிய முன்னிலை பெற்று இருப்பதை பார்க்க முடியும். ஆனால் அது இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் திறமை என்னவென்று பிரதிபலிக்கவில்லை. எனவே வெறும் ரன்களை வைத்து திறமையை மதிப்பிடக்கூடாது. சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒயிட் பால் தொடரில் ஸ்மித் நன்றாக விளையாடியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஆஸி முதல் டெஸ்ட்.. அறிவிக்கப்பட்ட இந்திய பிளேயிங் லெவன்.. 2 பேர் அறிமுகம்.. அஸ்வினுக்கு நடந்த சோகம்

அவர் நன்றாக விளையாடுகிறார் என்பதற்கான சான்று அவர் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டதையும், சில நல்ல ஷாட்கள் விளையாடியதையும் பார்க்க முடியும். எனவே இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஸ்மித் கணிப்பதற்கு கடினமான மனிதராக இருக்கிறார். எனவே இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதை பார்க்க ஆர்வமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார். பேட்டிங் பந்துவீச்சு என்று இரண்டு துறைகளிலுமே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சமமாக இருக்கும் சூழ்நிலையில் போட்டியின் முடிவு யார் பக்கம் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

- Advertisement -