இந்த முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இந்த தொடரில் யுவராஜ் சிங் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இவரது பேட்டிங் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதேபோல் ரோகித் சர்மா திரும்பி வந்ததும் மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் பெரிய அளவில் ரன்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
6 இன்னிங்ஸ் 259 ரன்கள்
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் தொடரை வென்றதில் பெரிய அளவிலான பெயர் ரிஷப் பண்டுக்கு சென்றது. அதே சமயத்தில் இந்தத் தொடரில் புஜாரா மிகச் சிறப்பான முறையில் முக்கியமான இன்னிங்ஸ்கள் விளையாடி கொடுத்திருந்தார். இந்த வெற்றியில் அவர் பந்தை தடுத்து விளையாடி பழையதாக்கியதற்கு பெரிய பங்கு இருக்கிறது.
மேலும் கப்பாவில் நான்காவது டெஸ்ட் போட்டியை வென்று கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் தொடரை கைப்பற்றிய பொழுது ரிஷப் பண்ட் மட்டும் இல்லாமல், முக்கியமான இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் தாக்குதல் முறையில் விளையாடி 91 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் மூன்று டெஸ்ட் 6 இன்னிங்ஸில் 259 ரன்கள் கொடுத்திருந்தார். அந்த டெஸ்ட் தொடர் வெற்றியில் கில்லுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.
19 நாட்கள் பயிற்சி
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் செஷன் செஷனாக விளையாட வேண்டும். அங்கு வேகமும் பவுன்ஸ் இருப்பதால் நீங்கள் நேரம் கொடுத்து விளையாடினால் அதற்கான மதிப்பு கிடைக்கும். ஆனால் கடந்த முறை கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தாக்குதல் பாணியில் விளையாடினார்கள். புஜாரா சிறப்பான முறையில் பந்தை தடுத்து விளையாடி நேரம் செலவிட்டார். ஆனால் அவரால் பந்தை தாக்கி விளையாட முடியாது”
“இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்றால் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பியதும், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் விராட் கோலி மற்றும் ஐந்தாவது இடத்தில் வரும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியாக ரன்கள் குவிக்க வேண்டும். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : முதல் டெஸ்டில் கில் விளையாடுவாரா? விராட் கோலியால் இந்த நன்மையும் இருக்கு – மோர்னே மோர்கல் பேட்டி
“நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முன்பாக நான் கில்லிடம் பேசினேன். கடைசியாக கடைசியாக அவர் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவதற்கு தயாரானது போலவே தயாராக வேண்டும் என்று கூறி இருந்தேன். கடந்த முறை கோவிட் காலத்திற்கு முன்பாக 19 நாட்கள் நான் கில்லுக்கு பயிற்சி அளித்திருந்தேன். இப்போது அவர் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் நல்ல பணி நெறிமுறை இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியாவில் முதல் சதத்தை அடிப்பதற்கு மிகவும் பசியோடு காத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






