ஆஸி மீடியா மதிக்க இத மட்டும் செய்யுங்க.. 3 முறை அனுபவத்துல நான் கண்டுபிடிச்சது இதுதான் – ரவி சாஸ்திரி பேட்டி

0
69
Ravi

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது ஆஸ்திரேலியா மீடியா மதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என இந்திய முன்னால் தலைமை பயிற்சிளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா மீடியாக்கள் முழுவதுமாக விராட் கோலியை மிகவும் கொண்டாடி வருகின்றன. அவரை தவிர்த்து யாரையும் ஆஸ்திரேலிய மீடியாக்கள் இந்திய தரப்பிலிருந்து எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

உலக கிரிக்கெட் கருத்து

ஒரு அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது என்றால், அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக விளையாடுகிறது என்று அர்த்தம் என உலக கிரிக்கெட்டில் கூறுவார்கள். அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் ஆஸ்திரேலியா அணிக்கு ஆதரவாக இருப்பார்கள்.

இந்த நிலையில் ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்திருக்கிறது. ஒரு பயிற்சியாளராக அவருக்கு இது மிகப்பெரிய கௌரவமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா மீடியாக்கள் மரியாதையை பெற என்ன செய்ய வேண்டும்? என இந்திய அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதை கட்டாயம் செய்ய வேண்டும்

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும்பொழுது “ஆஸ்திரேலியா மீடியாக்களில் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதை கூடிய விரைவில் சீக்கிரமாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியா மீடியாக்கள் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் இருக்கும். நீங்கள் மைதானத்திற்கு சென்று கடினமாக விளையாடுவதில் உறுதியாக இருங்கள். உங்களுடைய வீரர்கள் மைதானத்தில் கடினமாக செயல்பட்டால் ஆஸ்திரேலியா மீடியாக்கள் மதிக்கும்”

இதையும் படிங்க : இந்திய அணி தோல்விதான்.. ஆனாலும் ரொம்ப கஷ்டமான இந்த பிட்ச்ல அடிச்ச சதம்தான் எனக்கு பெஸ்ட் – கோலி பேட்டி

“இது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். பயிற்சியாளராக நான் மூன்று முறை இருந்து இதை கண்டுபிடித்து இருக்கிறேன். நீங்கள் ஆஸ்திரேலியா அணியை அடக்க விரும்பினால், நீங்கள் மைதானத்தில் ஒரு அங்குலத்தை கூட அவர்களுக்கு விட்டு விடக்கூடாது. இப்படி விளையாடுவதை தவிர வேறு வழியில்லை. இல்லையென்றால் உங்களுக்கு ஒரு அங்குலம் கூட போட்டியில் கிடைக்காது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -