தற்போது மகேந்திர சிங் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக யார் சரியாக இருப்பார்கள் என இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
இந்த முறையை சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா, பதிரனா மற்றும் சிவம் துபே நால்வரை தக்க வைத்திருக்கிறது. மேலும் அன்கேப்டு பிளேயர் வகையில் மகேந்திர சிங் தோனியை வெறும் 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறது. இது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மகேந்திர சிங் தோனியின் ஐபிஎல் காலம்
மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக அனைத்து ஆட்டங்களையும் விளையாடுவாரா என்று கூற முடியாது. எனவே பிளேயிங் லெவனில் இடம் பெற்று தோனி இருக்கும் பொழுதே விளையாடக் கூடிய வகையில் ஒரு விக்கெட் கீப்பரை வாங்குவதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் முயற்சி செய்யும்.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து கூடிய விரைவில் ஓய்வு பெறுகின்ற நிலையில் இருக்கிறார். இன்னும் ஒரு ஆண்டு அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் இருக்கிறது. எனவே சிஎஸ்கே அணியில் அவருடைய இடத்திற்கு குறைந்தபட்சம் 4, 5 ஆண்டுகளுக்கு மேல் விளையாடக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர் தேவையாக இருக்கிறார்.
இவர்தான் தோனி இடத்துக்கு சரியானவர்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சிஎஸ்கே அணிக்கு என்ன வேண்டும்? அவர்களுக்கு அடுத்த தோனியாக தோனியின் வாரிசு ஒருவர் தேவை. அதாவது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தேவை. அது ஒரு இந்தியராக இருந்தால் அவர்களுக்கு மிகவும் நல்லது. எல்லோரும் சொல்கிறார்கள் அதனால் நானும் சொல்கிறேன். நான் சொல்லக்கூடிய வீரருக்கு 30 வயது ஆகிவிட்டது. விரைவில் தந்தையாகவும் போகிறார். அவர் வேறு யாரும் கிடையாது கேஎல்.ராகுல்தான்”
இதையும் படிங்க : அஸ்வின் சவாலை ஏற்கிறேன்.. ஆனா இங்க அது மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கலை – ஸ்மித் பதிலடி
“அவர்கள் ஏலத்தில் இதற்காக எவ்வளவு தூரம் செல்வார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. தற்போது அவர்களது கையில் செலவழிக்க 55 கோடி ரூபாய் இருக்கிறது. எனவே அவர்கள் அவரை வாங்க முயற்சி செய்வார்கள். மேலும் அவர்கள் இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை ஒரு 15 கோடி ரூபாய்க்கு கிடைப்பார்களா? என்று பார்ப்பார்கள். மேலும் அவர்கள் ஸ்ரேயாஸ் ஐயரையும் பார்ப்பார்கள். ஏனென்றால் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய அவர்களுக்கு ஒரு இந்திய வீரர் தேவை” என்று கூறியிருக்கிறார்.






