ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் காயமடைந்ததை தொடர்ந்து மிக முக்கிய வீரர் ஒருவர் காயமடைந்திருப்பது கவலையே அதிகரித்து இருக்கிறது.
தற்போது இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பெர்த் மைதானத்தில் முகாமிட்டது பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் சிமுலேஷன் மற்றும் விசுவலேசன், இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சிப் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த முக்கிய வீரர்கள்
இந்திய வீரர்கள் சிமுலேஷன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது கேஎல்.ராகுல் கையில் காயமடைந்து உடனடியாக களத்தை விட்டு வெளியேறி விட்டார். இவருக்கு முன்பாக இளம் வீரர் சர்பராஸ் கான் முழங்கையில் காயம் அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து கவலை அளிக்கும் விதமாக விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஸ்கேன் செய்தார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் என்ன காயம் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. தற்பொழுது விராட் கோலி மிகவும் நலமுடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் பயிற்சி கலந்து கொண்டு விளையாடுகிறார் என்றும் நம்பிக்கை அளிக்கும் செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு
இப்படியான நிலையில் இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் சிமுலேஷன் பயிற்சியில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்த பொழுது கை விரலில் காயமடைந்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு தற்பொழுது ஸ்கேன் செய்யப்பட்டு பயிற்சியில் இருந்து வெளியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : இப்ப இருக்கிறது பழைய விராட் கோலி கிடையாது.. அதனால நாங்க தாராளமா இதை பண்ணலாம் – உஸ்மான் கவாஜா பேட்டி
இது குறித்து வெளியாகியிருக்கும் செய்தியில் “உண்மைதான் கில் தற்பொழுது காயம் அடைந்திருக்கிறார். அவரை முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விளக்குவது குறித்து மருத்துவக் குழு தீவிரமாக கண்காணிப்பு வருகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு இன்னொரு பின்னடைவாக அமைந்திருக்கிறது!






