இப்ப இருக்கிறது பழைய விராட் கோலி கிடையாது.. அதனால நாங்க தாராளமா இதை பண்ணலாம் – உஸ்மான் கவாஜா பேட்டி

0
58
Khawaja

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பற்றி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நவம்பர் 22 ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்க இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு மிகப்பெரிய வரவேற்பும் மரியாதையும் ஆஸ்திரேலிய மீடியாக்கள் அளித்து வருகின்றன.

- Advertisement -

விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் மாறிய சூழ்நிலை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எப்பொழுதும் களத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்பட கூடியவர்கள். இதனால் எதிரணியினர் உடன் பேட் மற்றும் பந்து என்று இல்லாமல் வாயாலும் கடுமையாக போட்டியிடக் கூடியவர்கள். அதுவும் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றால் இப்படியான விஷயங்கள் களத்தை மிகவும் சூடாக வைத்திருக்கும்.

அதே சமயத்தில் விராட் கோலி இந்த விஷயத்தில் அப்படியே ஆஸ்திரேலியா வீரர்களை போன்று செயல்பட கூடியவர். இதனால் அவருக்கு இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் அவர்களுக்கு எதிராக களத்தில் வாயாலும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் அவர்களை பலமுறை வென்றவராக விராட் கோலி இருக்கிறார். மேலும் பேட்டாலும் சிறப்பாக பதில் சொல்லி இருக்கிறார். இதன் காரணமாக தற்பொழுது ஆஸ்திரேலியாவில் அவருக்கு மரியாதையான வரவேற்பை ஆஸ்திரேலிய மீடியாக்கள், மக்கள் மற்றும் வீரர்கள் வழங்கி வருகிறார்கள்.

- Advertisement -

இவர் பழைய விராட் கோலி இல்லை

விராட் கோலி பற்றி உஸ்மான் கவாஜா கூறும்பொழுது “இப்பொழுது இருப்பது மிகவும் வித்தியாசமான விராட் கோலி.பழைய முறையில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பவர் கிடையாது. எனவே நீங்கள் அவரிடம் சென்று ஜோக் அடித்து ஜாலியாக பேசலாம். ஆனால் அவர் இப்போதும் உங்களுக்கு எதிராக ரன்கள் அடிக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது” என்று கூறியிருக்கிறார்”

அலெக்ஸ் கேரி கூறும் பொழுது “இந்தியாவில் நாங்கள் விளையாடும் பொழுது களத்தில் ஆக்ரோஷமான எதுவும் நடக்கவில்லை. அவரும் எங்களை எதுவும் செய்யவில்லை, நாங்களும் அவரை எதுவும் செய்யவில்லை. அதே சமயத்தில் பேட்டிங்கில் சிறப்பாக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சாஸ்திரி இடத்துக்கு கம்பீர் வரவே முடியாது.. இப்ப இந்திய டீமின் பிரச்சனையே அவர்தான்.. காரணம் இதான் – டிம் பெய்ன் பேட்டி

மிட்சல் ஸ்டார்க் கூறும் பொழுது “நான் அவரிடம் இணைந்து ஒன்று இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடர் விளையாட வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன். நான் அவர் சண்டையிடுவதையும் ரசித்தேன். எனவே அவரிடம் நான் சண்டை செய்யவோ அல்லது அவர் என்னிடம் சண்டை செய்ய முயன்றது கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -