ரொம்ப கஷ்டமா இருக்கு.. இனிமே இப்படி பவுலிங் பண்ண முடியாது.. அத செஞ்சே ஆகணும் – மார்க்ரம் பேட்டி

0
2006
Markram

இன்று தென் ஆப்பிரிக்க அணி நான்காவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 283 ரன்கள் தந்து, மேலும் 148 ரன்கள் மட்டுமே எடுத்து,135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்த தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசியிருக்கிறார்.

முதலில் நடைபெற்ற மூன்று டி20 போட்டியில் இந்திய அணி 2 போட்டிகளை வென்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி ஒரு போட்டியை வென்றிருந்தது. இந்த போட்டியை வென்றால் தொடரை சமன் செய்து விடலாம் என்கின்ற நிலை தென் ஆப்பிரிக்க அணிக்கு இருந்தது. ஆனால் இந்திய அணி அதிரடியான பேட்டிங் மூலம் ஒட்டுமொத்தமாக முடிவை மாற்றி விட்டது.

- Advertisement -

பலவீனமான தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு

இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் ஆட்டம் இழக்காமல் 56 பந்தில் 109 ரன்கள், திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 47 பந்தில் 120 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 283 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஸ்டப்ஸ் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 29 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 18 புள்ளி இரண்டு ஓவரில் 148 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

நேர்மையாக இது மிகவும் கடினமானது

போட்டிக்குப் பின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் எய்டன் மார்க்ரம் “நேர்மையாக சொல்வதென்றால் இது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்திய அணி எங்களை மூன்று துறைகளிலும் வீழ்த்தி விட்டது. இதற்கான பெருமை அவர்களுக்கு சேரும். மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் எங்களுக்கு திரும்பி வருவது மிகவும் கடினமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் ஸ்டெம்பை நோக்கி மட்டும் பந்து வீசினால் போதாது. கொஞ்சம் வைடு லைனிலும் பந்து வீச வேண்டும். நாங்கள் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குள் சிறந்த அணியாக ஒன்றிணைவோம்”

இதையும் படிங்க : கோல்டன் டக் ஆனேன்.. அடுத்து நம்பவே முடியல.. கடவுளுக்கு அடுத்து எனக்கு இவர்தான் – திலக் வர்மா பேட்டி

“ஒரு வெள்ளைப்பந்து அணியாக நாங்கள் சரியான விஷயங்களில் ஈடுபட்டு சிறந்த வீரர்களைக் கொண்டு வருவோம். வீரர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்கள் அவர்கள் என்ன முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். யான்சென் மற்றும் கோட்சி இருவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இது எளிதானது கிடையாது. அவர்கள் சிறந்த கேரக்டரை காட்டினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -