இங்கிலாந்து டெஸ்ட்.. நியூஸி அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் ரிட்டயர்மென்ட்.. இந்திய அணிக்கு நெருக்கடி தரும் தொடர்

0
222
Williamson

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகளையும் வென்றால் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டு முக்கிய சம்பவங்கள்

இந்தத் தொடரில் காயமடைந்திருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார். இத்துடன் நியூசிலாந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டின் முக்கிய வீரரான வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி இந்தத் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் காயம் அடைந்திருக்கும் கையில் ஜெமிசன் மற்றும் பென் சியர்ஸ் இருவரும் இடம் பெறவில்லை. மேலும் இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்ட அஜாஸ் பட்டேல் மற்றும் இஸ் சோதி இருவரும் இந்தத் தொடருக்கான நியூசிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை. மிச்சல் சான்ட்னர் மட்டும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் கையில் இந்திய அணிக்கான சாதகம்

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 28ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகள் டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 14 ஆம் தேதிகளில் துவங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியை டிரா செய்தாலோ அல்லது ஒரு போட்டியை வென்றாலோ நியூசிலாந்து அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்பொழுது இந்திய அணிக்கான சாதகத்தை உருவாக்கும் நிலையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

இதையும் படிங்க : 37-5.. காப்பாற்றிய கேப்டன் பவல்.. சாம் கரன் காட்டிய அதிரடி.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து டெஸ்ட் அணி : டாம் லாதம் (கே), டாம் ப்ளூன்டெல் (வி. கீ), டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர் (2வது மற்றும் 3வது டெஸ்ட்), நாதன் ஸ்மித், டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.

- Advertisement -