ஆஸி டெஸ்ட்.. இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சி போட்டி.. ஆனால் பிசிசிஐ கடும் கட்டுப்பாடு.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

0
1141
BCCI

ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு நடைபெற இருந்த மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியை பிசிசிஐ ரத்து செய்து இருந்தது. தற்போது மீண்டும் அந்தப் போட்டிக்கு பிசிசிஐ சில கடுமையான உத்தரவுகளுடன் அனுமதி கொடுத்து இருக்கிறது.

இந்திய அணி தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் முகாமிட்டு, நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டு வருகிறது. சொந்த நாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த காரணத்தினால் இந்திய அணி நெருக்கடியில் இருக்கிறது.

- Advertisement -

இன்ட்ரா-ஸ்குவாட் பயிற்சி போட்டி

இந்திய அணி ஆஸ்திரேலிய செல்வதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா ஏ அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்திய ஏ அணி சென்று இருக்கிறது.இந்த இந்திய ஏ அணிவுடன் இந்திய அணி மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இதை திடீரென பிசிசிஐ வலைப்பயிற்சிக்காக நேரம் வேண்டும் என கூறி ரத்து செய்தது.

இந்த நிலையில் பிசிசிஐ மீண்டும் இந்த போட்டிக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்திய அணியினர் இந்திய ஏ அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்ட வார்ம்அப் போட்டியில் இந்திய அணி விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ விதித்திருக்கும் கடுமையான கட்டுப்பாடு

இந்த பயிற்சி போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க கூடாது, மூடிய மைதானத்தில் நடைபெற வேண்டும், மேலும் வயதான ஊழியர்கள் தங்களின் மொபைலில் போட்டியை படம் பிடிக்கக் கூடாது, கருப்பு கவரை கொண்டு சுற்றிலும் மறைத்து பயிற்சி போட்டியை நடத்த வேண்டும் என மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திய வீரர்கள் பெர்த் ஆடுகளத்தில் என்ன மாதிரியான பந்துகளில் தடுமாறுகிறார்கள்? பந்துவீச்சாளர்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசுகிறார்களா? என்பது போன்ற தகவல்கள் ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்துக்கு கிடைக்கக் கூடாது என பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

இதையும் படிங்க : என்னை பத்தி கம்பீர் கோபமா பேசினது ஆச்சரியமா இல்ல.. நீங்க விராட் கோலி கிட்டயே கேளுங்க – ரிக்கி பாண்டிங் விளக்கம்

மேலும் பெர்த் மைதான ஆடுகளத் தயாரிப்பாளர் முதல் போட்டியின் ஆடுகளம் வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்டதாக இருக்கும் என்றும், 10 மில்லி மீட்டர் புல் ஆடுகளத்தில் விடப்பட்டிருக்கிறது என்றும், மேலும் ஆடுகளம் 5 நாட்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -