இந்திய கிரிக்கெட்டையே மாத்தி இருக்காரு.. என்னோட அடையாளமே இவர்தான் – நிதிஷ் குமார் ரெட்டி பேட்டி

0
259

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிர்கால நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரராக கருதப்படும் நிதீஷ் குமார் ரெட்டி சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் தனது அடையாள வீரர் குறித்து நிதீஷ்குமார் ரெட்டி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய எதிர்கால நட்சத்திரம் நிதிஷ் குமார் ரெட்டி

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆல்ரவுண்டர் வீரரான நிதிஷ்குமார் ரெட்டி 15 ஆட்டங்களில் விளையாடி 303 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு தனது பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய டி20 அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது.

அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறார். எதிர்கால வீரராக கருதப்படும் இவர் இதுவரை மூன்று சர்வதேச போட்டிகளில் விளையாடி 90 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நிதிஷ்குமார் ரெட்டி விராட் கோலியை தனது அடையாள வீரராக கருதுகிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் இவர்தான் எனது அடையாளம்

இதுகுறித்து அவர் கூறும் போது “கிரிக்கெட்டில் எனது அடையாள வீரராக நான் விராட் கோலியைக் குறிப்பிடுவேன். சிறுவயதில் இருந்தே அவரைப் பார்த்து இருக்கிறேன். அவரது பாணியின் அடிப்படையில் எனது கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போதில் இருந்தே அவரை பார்த்தேன். அவரது ஆட்டத்தையும், அணுகுமுறையையும் ரசித்திருக்கிறேன். அவர் இந்திய கிரிக்கெட்டை சிறப்பாக மாற்றி இருக்கிறார். விராட் கோலி பற்றிய அனைத்தையும் விரும்புகிறேன்.

இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. ஆஸி டெஸ்ட் தொடர்ல பும்ராவுக்கு கடும் போட்டியா இவர்தான் இருப்பாரு – மைக்கேல் வாகன் கணிப்பு

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. அதுவே என்னுடைய இறுதிக் கனவு. பென் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் போன்றவர்கள் சிறந்த ஆல் ரவுண்டர்களாக நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்திய அணியில் வேகப்பந்து ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியாவை தவிர குறிப்பிடத்த வீரர்கள் இல்லாத நிலையில் தற்போது இவரது வரவு இந்திய அணிக்கு கூடுதல் தேர்வை கொடுத்திருக்கிறது. இனி அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் எதிர்கால நட்சத்திர வீரராக வருவதற்கு சிறந்த வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -