இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐபிஎல் சீசன் திருவிழா 17 சீசன்கள் இதுவரை நடைபெற்ற நிலையில் 18 வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஒரு அணி தான் தக்க வைக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை வருகிற 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருக்கும் சூழ்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை குறியீடாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா
ஐபிஎல் சீசன் அடுத்த மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்கள் தக்கவைக்கிற வீரர்களின் பட்டியலை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது இறுதி பட்டியலை தேர்வு செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இறுதிப் பட்டியலை தேர்வு செய்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மற்ற ஒன்பது அணிகளும் தங்களது இறுதிப் பட்டியலை கிட்டத்தட்ட தேர்வு செய்துவிட்டன என்று கூறலாம். இந்த நிலையில் அனைத்து அணிகளும் இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து தக்க வைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறது.
சிஎஸ்கே வெளியிட்ட சூசகமான பதிவு
அதில் தான் தக்க வைத்திருக்கும் ஐந்து வீரர்களின் பெயர்களை குறிப்பிடாமல் குறியீடாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு குறியீடும் ஒரு வீரரின் அடையாளத்தை குறிப்பிடும் வகையில் அந்தப் பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப ஐந்து வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள்.
💛😍🔥🤝✅🌟
— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024
💪🧑🍳⚡🦁🕸️⚓
🚀🧨🏏🥊🛶🎯
🏓🎤🎩⏳🚁🔍
🛡️⚔️🧸🥝🎠🤞
The Ones You Seek is Seeking You!
Tap the 🔗 – https://t.co/MNwIFDgxBK
and play the #DeadlineDay now! #WhistlePodu #Retentions2025
இதையும் படிங்க:10 ஃபோர்ஸ்.. 100 ரன்.. ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை.. தொடரை வென்ற இந்திய மகளிர் அணி.. நியூசிலாந்து தோல்வி
இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஜடேஜா, தோனி, ருதுராஜ், பதிரானா, ரச்சின் என ஒரே மாதிரியான பெயரை குறிப்பிட்டு வருகிறார்கள். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் இவர்களை தக்கவைத்து இருக்கிறதா? அல்லது வேறு வீரர்களை தக்க வைத்துள்ளதா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வந்துவிடும். எனவே இது குறித்த அதிகாரப்பூர்வமான பட்டியலை விரைவில் பார்க்கலாம்.






