கேரி கிரிஸ்டன் அந்த 2 வீரர்களை கேட்டார்.. உடனே கோச் பொறுப்பை விட்டு தூக்கிட்டாங்க – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்

0
1672
Basit

பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கான காரணங்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பேசி இருக்கிறார்.

கேரி கிரிஸ்டன் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்ற போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். ஆனால் பயிற்சியாளர் பொறுப்பில் வெற்றிகரமான அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஆறு மாதம் கூட பயிற்சியாளர் பொறுப்பில் தொடர முடியவில்லை.

- Advertisement -

அணிக்குள் நடந்த கருத்து மோதல்கள்

கேரி கிரிஸ்டன் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியில் இருக்கும் குழு அரசியலை ஒழித்து கட்ட நினைத்தார். வீரர்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் என்று நேரடியாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்ததாக செய்திகள் வெளி வந்திருந்தது.

மேலும் அவர் சில தனிப்பட்ட வீரர்களை சேர்க்கவும், நீக்கவும் தயக்கம் காட்டாதவராக இருந்தார். இதனால் ஷாகின் அப்ரிடி போன்ற முன்னணி வீரர்களுக்கு அவரை பிடிக்கவில்லை. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அவரது விருப்பங்களை நிறைவேற்ற முன் வரவில்லை. இதன் காரணமாக பொறுப்பில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்திருக்கிறார்.

- Advertisement -

சத்தம் உயர்ந்தால் விலக்கப்படுவீர்கள்

இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் மொக்ஷின் நக்வி பெரிய அதிகாரத்துடன் பொறுப்புக்கு வந்திருக்கிறார். பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் மேனேஜர்கள் நீக்கப்படுகிறார்கள். முன்பு இருந்தது போல் இல்லாமல், இப்போது யார் குரலை உயர்த்தினாலும் அவர்கள் நீக்கப்படுகிறார்கள்”

“பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து இந்த கதை துவங்குகிறது. கிரிஸ்டன் வேறு ஒரு கேப்டனை விரும்பினார். அணியில் வேறொரு வீரரையும் வேண்டும் என்று கேட்டார். துரதிஷ்டவசமாக அவர்கள் இருவரும் அணியில் இல்லை. ஒருவேளை தனக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரால் ஒரே இரவில் மாற்ற முடியும் என்று அவருக்கு தெரியாது”

இதையும் படிங்க : 6 தந்திரங்கள்.. மொத்தமா இந்த இந்திய வீரர் கிட்ட இருக்கு.. இவரை சமாளிக்க முடியாது – மேக்ஸ்வெல் கருத்து

“ஷாகின் அப்ரிடி மற்றும் பாபர் அசாம் என பாகிஸ்தான் அணியில் எல்லா வீரர்களுமே முகமது ரிஸ்வான் கேப்டன் பொறுப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவரின் தலைமையில் பாகிஸ்தான் அணி கடுமையாக போராடவில்லை என்றால் அது துரதிஷ்டமாக அமையும். மேலும் இது பல சிறந்த விஷயங்களை கொண்டு வருவதற்கு புதிய வாய்ப்பு. இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வெல்வார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அணியின் சூழ்நிலை மாறி இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -