இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெறும் என்று நினைத்த நிலையில் இந்திய அணியின் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் கௌதம் கம்பீர் மீது புகார் கூற வேண்டாம் எனவும் ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி அதற்குப் பிறகு புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி தற்போது தொடரை இழந்துள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்கள் குவிக்காததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் வாஷிங்டன் சுந்தரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலே அனுப்பி பேட்டிங் செய்ய வைத்தது அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. மேலும் அணியின் ஒரு பயிற்சியாளர் பொறுப்பு என்பது குறைவான செயல் திறன் கொண்டதாக இருக்கும் எனவும், ரோகித் சர்மா இனி தனது கேப்டன் பொறுப்பில் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.
கம்பீரை குறை சொல்வது நியாயமற்றது
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 180 ரன்களாவது குவித்து இருந்தால் அந்த ஆட்டம் வேறு விதமாக மாறி இருக்கும். ஆனால் நான் இந்த விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். சர்ப்ராஸ்கானை பேட்டிங் ஆர்டரில் கீழே இறக்கிவிட்டு இடது கை ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தரை மேலே அனுப்பியது திருப்திகரமாக அமையவில்லை. அது போன்ற விஷயங்கள் நடைபெறக் கூடாது. இது விசித்திரமாக உள்ளது ரோகித் சர்மா கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது ஒன்றுதான்.
இதையும் படிங்க:வெறும் 22 ஓவர்.. 196 ரன்.. வெஸ்ட் இண்டீஸ் 19 வருட சாதனை வெற்றி.. இலங்கை அணி தோல்வி.. 3வது ODI
இது ஒரு டி20 வகையிலான சிந்தனை. நீங்கள் வீரர்களின் ஒட்டுமொத்த தரத்திற்கு தகுந்தவாறு செல்ல வேண்டும். ஒரு அணியில் பயிற்சியாளருக்கு குறைந்த பட்ச செல்வாக்குதான் உள்ளது என்று கூறுவேன். அவர் மைதானத்தில் கால் பதிக்கவில்லை கேப்டனே அங்கு பொறுப்பேற்கிறார். ஆனால் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ததற்கு கம்பீரை பாராட்ட வேண்டும். சர்பராஸ் கான் அல்லது நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை மேலே அனுப்பும் நடவடிக்கை இன்னும் சரியாக அமையும். ஆனால் கௌதம் கம்பீர் மீது எந்தவிதமான பொறுப்பையும் வைப்பது நியாயமற்றது” என்று கூறி இருக்கிறார்.






