மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியிருக்கிறார்.
நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த இரண்டு போட்டிகளிலும் மிக மோசமாக நியூசிலாந்து விளையாடி தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையை விட பெரிய வெற்றி
இந்தியாவில் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வெல்வது என்பது உலகக் கோப்பையை வெல்வதைவிட மிகக் கடினம் என ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற வீரர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையிலும் இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த பொழுதிலும், எல்லாம் தாண்டி நியூசிலாந்து பெற்றிருக்கும் வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியின் தரப்பில் நட்சத்திர வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரியாக செயல்படாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இந்திய அணி சூடாக வந்தது
வெற்றி குறித்து டாம் லாதம் பேசும்பொழுது “உண்மையிலேயே இது சிறப்பான உணர்வாக இருக்கிறது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடி வெற்றிபெற்றிருக்கிறோம். இந்தியா வரும்பொழுது எப்பொழுதும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வீர்கள். நீங்கள் ஸ்கோர் போர்டில் ரன் வைப்பது மிகவும் முக்கியம். நாங்கள் அதை செய்தாலும் சான்ட்னர் முக்கியமாக இருந்தார். அவர் தொடர்ந்து அணியை சுற்றி இருந்திருக்கிறார். தற்போது கிடைத்த வாய்ப்பில் பெரிதாக சாதித்திருக்கிறார்”
இதையும் படிங்க : எதிர்பார்க்கவே இல்லைங்க.. சமாளிக்கல முடியல.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – ரோஹித் சர்மா ஏமாற்றம்
“நேற்று நாங்கள் விளையாடிய விதம் முன்னிலை பெற உதவியது. இந்திய அணி திருப்பி சூடாக வரும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் மிகச் சூடாக வருவார்கள்என்று நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் நல்ல வேலையாக இரண்டாவது செஷனில் விக்கெட் கைப்பற்றி அவர்களை தடுத்து விட்டோம். கடைசி விக்கெட்டுக்கு சவுதி கேட்ச் பிடித்த பொழுது அது சிறந்த உணர்வாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






