ரோகித் மேல தப்பில்லை.. சான்ட்னர் கிட்ட இந்த ஸ்பெஷல் இருக்கு.. அதான் பிரச்சனை – அனில் கும்ப்ளே விளக்கம்

0
73
Rohit

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த விதம் குறித்து அனில் கும்ப்ளே விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மலிவான முறையில் டிம் சவுதி பந்து வீச்சில் ஆட்டம் இழந்து இருந்தார். மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமான முறையில் ஆட்டம் இழந்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் கடைசி எட்டு இன்னிங்ஸ்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த எட்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆறு இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி இந்திய அணிக்கு ஏமாற்றம் கொடுத்து இருக்கிறார். மேலும் அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருந்து வருகிறது.

துவக்க இடத்தில் அவரிடம் வழக்கமான டெஸ்ட் பேட்ஸ்மேன் விளையாடக்கூடிய அணுகுமுறை இல்லாத காரணத்தினால் மிக எளிதாக விக்கெட்டை இழந்து இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆட்டம் இழந்த விதம் குறித்து அனில் கும்ப்ளே விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் அவுட்டில் நடந்தது இதுதான்

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறும் பொழுது “முதலில் ரோஹித் சர்மா ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடினார். பிறகு அவர் கிரீசில் இருந்து இறங்கி வந்து விளையாட முயற்சி செய்தார். துரதிஷ்டவசமாக அதை சான்ட்னர் பார்த்துவிட்டு பந்தை கொஞ்சம் ஷார்ட்டாக வீசினார். அதன் காரணமாக அந்த பந்து ரோகித் சர்மாவுக்கு பவுன்ஸ் அதிகமாக மாறியது”

இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட் தொடர்.. ரோகித்தோட இந்த முடிவு பிரச்னையாகும்.. நானா இருந்தா அவர விட்ருக்க மாட்டேன் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

“ரோகித் சர்மா காட்டிய இண்டெண்ட் சரியாக இருந்தது. ஆனால் அந்தப் பந்து சான்ட்னரால் நன்றாக வீசப்பட்டது. இதற்குப் பந்துவீச்சாளருக்குதான் நான் கிரெடிட் கொடுக்க வேண்டும். சான்ட்னர் இடம் இருக்கும் திறமை என்னவென்றால், அவர் பந்தை கொஞ்சம் தாமதமாக கையில் இருந்து விடுவிப்பார். இதனால் பேட்ஸ்மேன் என்ன செய்யப் போகிறார் என்று அவர் பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது. இப்படித்தான் ரோஹித் சர்மா இறங்கி வருவதை பார்த்து பொறுமையாக ஷார்ட்டாக வீசி விக்கெட்டை எடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -