இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் நியூசிலாந்து அணியை விட குறைவான ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடும் சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. இறுதியாக 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் புல்டாஸ் ஆக வீசப்பட்ட பந்தை லென்த் சரியாக கணிக்கத் தவறி மிட் விக்கெட் திசையில் விளையாட முயற்சித்து தேவையில்லாமல் தனது விக்கெட்டை தாரை வார்த்தார். விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வரும் வேளையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மில்லியன் முறை பேசியிருக்கிறேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர் பந்தின் லென்த்தை எவ்வாறு சரியாக கணிக்கத் தவறினார் என்பதே எனக்கு கவலையான விஷயமாக இருக்கிறது. அவர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடும் போதும் லென்தை கணிக்கும் விதம் பிரச்சனையாக இருப்பது போல தெரிகிறது. சரியாக லைன் அண்ட் லென்த்தில் முழுமையாக முடிவடையாத பந்தை அவர் எப்படி விளையாடி முன்னேற விரும்புகிறார் என்பது குறித்து ஒரு மில்லியன் முறை நான் பேசி இருக்கிறேன்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. சிஎஸ்கேவில் விளையாடுவாரா தோனி.? அவரே வெளியிட்ட சூசக தகவல்.. எகிறும் எதிர்பார்ப்பு
அதனால் அவர் லென்த்திற்கு எதிராக எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால் சுழற் பந்துவீச்சை சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இந்த முறை அவர் பந்தின் லென்த்தை முற்றிலும் தவறாக கணித்தார். மேலும் அவர் ஸ்வீப் ஷாட்க்கு சென்ற போது பந்து அவரது மட்டைக்கு கீழ் கிட்டத்தட்ட பிட்ச் ஆனது. அவரது ஷாட் தேர்வை விட அவர் பந்தை எப்படி தவறவிட்டார் என்பது தான் பிரச்சனையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






