கடைசி 3 விக்கெட்.. 167 ரன்கள்.. மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து அணிக்கு தொடரை இழக்கும் நெருக்கடி

0
228
Pakistan

பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் வந்திருக்கிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தற்பொழுது தொடர் சமநிலையில் இருக்கிறது.

- Advertisement -

இரண்டு துறையில் கலக்கிய பாகிஸ்தான் அணி

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் 52, ஜெமி ஸ்மித் 89 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் சஜித் கான் 6 விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 73 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

கடைசி மூன்று விக்கெட்டுக்கு 167 ரன்கள்

இந்த நிலையில் ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் சவுத் ஷகீல் 223 பந்துகளில் 5 பவுண்டரிகள் உடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார். பேட்டிங் வரிசையில் ஒன்பதாவதாக வந்த நோமன் அலி 84பந்தில் 45 ரன்கள், பத்தாதாக வந்த சஜித் கான் ஆட்டம் இழக்காமல் 48 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்கள். கடைசியாக மூன்று விக்கெட்டுகளில் பாகிஸ்தான் அணி 167 ரன் குவித்து இங்கிலாந்தை தாண்டியது.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் அதை செய்யறதை பார்த்தேன்.. திருப்பி நான் இந்திய அணிக்கு அதை செஞ்சேன் – மிட்சல் சான்ட்னர் பேட்டி

பாகிஸ்தான் அணி இறுதியாக 86.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 344 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ரேகான் அஹமத் 4 சோயப் பஷீர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் மூன்று விக்கெட்டுகளை 24 ரண்களுக்கு இழந்து, 53 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. தற்போது பாகிஸ்தான அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பில் அருகில் இருக்கிறது!

- Advertisement -