ஆஸி டெஸ்ட்.. தேவை இல்லாம ஹைப் ஏத்தறாங்க.. சின்ன பசங்க போய் ஜெயிக்கலையா? – முகமத் ஷமி விமர்சனம்

0
306
Shami

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு தேவையில்லாமல் பரபரப்பு கூட்டப்படுவதாக முகமத் ஷமி விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

வரலாறு படைத்த 2021

இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடரில் வென்று இருக்கிறது. இதில் 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இடம் பெறவில்லை. இந்திய அணியில் முழுக்க நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தார்கள்.

அதே சமயத்தில் 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி முழுமையாக எல்லா வீரர்களும் நிரப்பப்பட்டு இருந்தது. ஆனால் இந்திய அணியில் பல முன்னணி நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர், முகமது சிராஜ், நடராஜன், கில், ரிஷப் பண்ட் போன்ற அப்போது இளம் வீரர்களாக இருந்தவர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

தேவையில்லாமல் ஹைப் ஏற்றுகிறார்கள்

இதுகுறித்து முகமத் ஷமி கூறும் பொழுது “எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை ஆனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு மிகவும் பரபரப்பு கூட்டப்பட்டு கொண்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் காரணமாக நாம் இதுகுறித்து மிகவும் அதிகம் பேசிக் கொண்டு வருகிறோம். உண்மையில் நாம் இந்த தொடர் குறித்து அதிகம் பேச வேண்டிய தேவையே கிடையாது”

இதையும் படிங்க : 18 இரட்டை சதம்.. டான் பிராட்மேனுக்கு கீழ.. புஜாராவை ரோகித் கம்பீர் ஏன் ஒதுக்குறிங்க? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

“கடந்த இரண்டு முறையுமே நமது வீரர்கள் அங்கு சென்று மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்கள். கடைசி முறை இளம் வீரர்கள் அந்த ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டி இருக்கிறார்கள்.எனவே இந்த தொடருக்கு நாம் அதிகம் பிரஷர் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உங்களின் இயல்பான திறமை, பயிற்சி, உடல் தகுதி மற்றும் மீட்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தாலே போதும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -